Monday 16 November 2009

கருணநிதிக்கு ராஜபக்சே சாந்தி செய்தாரா?


1995இல் விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம் அவர்கள் பிரபாகரனுக்கு மூன்று அக்காக்களால் தோஷம் என்றார். அந்த மூன்று அக்காக்கள்: சோனியா அக்கா, சந்திரிக்கா அக்கா, ஜெயா அக்கா. அக்கால கட்டத்தில் சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கும் ஜெயலலிதா ஜெயராமிற்கும் இடையில் திரை மறைவு உடன்பாடு இருந்ததாக பேசப்பட்டது. அந்த உடன்பாடு இலவசமாக செய்யப்பட்டதல்ல என்றும் பேசப்பட்டது.

இப்போது கருணநிதியின் குடும்பத்திற்கும் ராஜபக்சே குடும்பத்திற்கும் இடையில் ஏதாவது உடன்பாடு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜபக்சேயின் சகோதரி இந்தியாவில் சுற்றுப் பயணம் கருணாநிதிக்குத் தெரியாமல் எப்படி செய்ய முடியும்?

ராஜபக்சேவின் சகோதரி நிருபமா ராஜபக்சே மற்றும் அவரின் கணவர் திருக்குமரன் நடேசன் ஆகியோர் திருச்செந்தூரில் நடந்த யாகத்தில் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இருவரும், இம்மாதம் 7ம் திகதி மதியம் திருச்செந்தூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றனர். பின்னர் திருச்செந்தூர் கீழரத வீதியில் கோட்டாறு செட்டிமடத்தில் அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்பு யாகத்தில் கலந்துகொண்டனர். இவர்களுக்கு பலத்த பாதுகாப்பு தமிழக அரசால் வழங்கப்பட்டது. சென்ற ஆண்டு இவர்கள் தமிழர்களுக்கு எதிரான போரில் சிங்களவர்கள் வெற்றி பெற தமிழகத்தின் பிரபல கோவிலில் யாகம் செய்தனர். சிங்களவர்களுக்கு ஆதரவான அரசு தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கிறதா?

தமிழ்நாட்டில் இருந்து ராஜபக்சேயிற்கு பொன்னாடை போர்க்க வந்த பாராளமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாடுதிரும்பிய பின் கருணாநிதி இலங்கையில் அமைதியும் சாந்தியும் நிலவுவதாக அறிக்கை விட்டார். கருணாநிதிக்கு ராஜபக்சே ஏதாவது சாந்தி செய்தாரா இப்படி உண்மைக்குப் புறம்பான அறிக்கை வெளியிட?

1 comment:

Anonymous said...

சாந்தி என்ன சாந்தி பெரிய அபிஷேகமே நடந்திருக்கும்...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...