Thursday 12 November 2009

கே. பத்மநாதன் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் நடுவில்


இந்திய அமைதிப் படையின் கொலைகள் கொள்ளைகள் கற்பழிப்புக்கள் போன்ற அட்டூழியங்கள் தாங்க முடியாமல் அவர்களை வெளியேற்ற விடுதலைப் புலிகள் பெரும்பிரயத்தனம் செய்தனர். அப்போது இலங்கையின் குடியரசுத் தலைவராக இருந்த ரணசிங்க பிரேமதாச இந்தியப் படை இலங்கையில் இருக்கக்கூடாது என்று சிங்களத் தேசிய வாதிகளால் நெருக்கடிக்குள்ளானார். அவரும் இந்தியப் படையை வெளியேற்றுவதையே விரும்பினார். இதனால் இந்தியப் படைகளை வெளியேற்ற பிரேமதாச புலிகளுக்கு உதவிதாகவும் அவரால் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் பணம் போன்றவை வழங்கப் பட்டதாகவும் உறுதியாக நம்பப் படுகிறது.

ராஜீவ் காந்தி கொலையில் இலங்கையும் பங்களிப்புச் செய்ததா என்பதற்கு இந்தியா விடைகாணத் துடிக்கிறது. இலங்கைத் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு இந்தியா எந்த அளவு உதவி செய்தது என்பதை அறிய இலங்கை தவிக்கிறது. இதற்கு அகப் பட்டவர் கே. பத்மநாதன். இந்த இரகசியங்கள் விடுதலைப் புலிகளின் உயர் மட்டத்தினருக்கு மட்டுமே தெரிந்த பரம இரகசியம். விடுதலைப் புலிகளின் தளபதி கிட்டுவை நடுக்கடலில் வைத்து இந்தியா கைது செய்ய முயன்றதும் இதற்காகவே.

இதுவரை கே. பத்மநாதனை இந்தியாவிறகு அனுப்பவோ அல்ல இந்திய உளவுத்துறையை பத்மநாதனை விசாரிக்க அனுமதித்ததாகவோ தகவல் இல்லை. ஆனால் பாக்கிஸ்த்தானியர் இலங்கை வந்து பாக்கிஸ்த்தானியாவில் நடந்த இலங்கைத் துடுப்பாட்டக் காரர்கள் மீதான தாக்குதலுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பது பற்றித் தகவல்கள் வெளிவந்தன. பத்மநாதனை விசாரிப்பது சம்பந்தமாக இலங்கை இந்தியாவிடையே முரண்பாடு ஏற்பட்டதா?

இந்தியாவிறகு பத்மநாதனை அனுப்பினால் அவர் நீதி மன்றத்தில் நிச்சயம் நிறுத்தப் பட்டே ஆகவேண்டும். அப்படி நிறுத்தினால் அவரை கட்த்தியதின் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிவந்து விடும். அவருக்கு இலங்கையில் செய்த சித்திரவதைகள் வெளிவரும். இதற்க்காகத்தான் அவரை இலங்கை இந்தியாவிற்கு அனுப்புவதை இலங்கை தவிர்க்கிறது.

இந்திய உளவுத் துறை பத்மநாதனை இதுவரை விசாரிக்கவில்லை என்பது நம்பமுடியாத ஒன்று. அவரை விசாரித்ததில் கிடைத்த உண்மைகள் அதிகாரத்தில் இருந்தோருக்கும் இருப்போருக்கும் சாதகமானதாக இல்லாததால் அவர் விசாரணை தொடர்பாக வெளியிடவில்லையா?

பத்மநாதனை இதுவரை இலங்கை நீதிமன்றில் நிறுத்தாது ஏன்? அவரை இதுவரை எந்த மனித உரிமைகள் அமைப்போ அல்லது சட்டத்துறையினரோ சந்திக்காதது ஏன்? அவருக்காக எவரும் ஆட்கொணர்வு மனு தாக்குதல் செய்யாதது ஏன்.? அவரின் தடுத்து வைப்பு சர்வ தேச மனித உரிமை நியமங்களுக்கு எதிரானது என்பது பற்றி எவரும் கருத்து தெரிவிக்காதது ஏன்? தமிழ்த் தேசியத்துக்கு சார்பானவர்கள் கூட அவரை மறந்துவிட்டனரா?

பத்மநாதனுக்குப் பின்னால் பல மர்மங்கள்! என்று வெளியாகும்?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...