Saturday 7 November 2009

ஐநாவும் இலங்கையும் இணைந்து செய்யும் அவசர நாடகம்


ஆயுத மோதல்களில் சிக்கியுள்ள சிறுவர்களுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதியாக ராதிகா குமாரசாமி என்னும் இலங்கைத் தமிழ்ப் பெண்மணி செயற்படுகிறார். இவர் இலங்கை அரசின் சிபாரிசின் பெயரில் இந்தப் பதவியைப் பெற்றவர். இவர் இலங்கை அரசின் நலன்களையே ஐக்கிய நாடுகள் சபையில் பேணுவதாகச் சந்தேகிக்கப் படுபவர். இலங்கை அரசின் அமைச்சர் ஒருவர் தனது ஆயுதப் படையில் சிறுவர்களை வைத்திருப்பதற்கு எதிராக எதுவுமே செய்யாதவர். இவர் இலங்கை முகாம்களில் இருக்கும் உடன் பிறந்த சிசுக்கள் உட்பட 37000 சிறார்கள் தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக எதுவுமே செய்யாதவர். விடுதலைப் புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசத்தில் இருந்த தாயின் வயிற்றில் பிறந்தது தான் அக் குழந்தைகள் செய்த ஒரே குற்றம். இதற்க்காக இவர்களைத் படுமோசமான சூழ்நிலையில் தடுத்து வைத்திருப்பதை எந்த நாட்டுச் சட்டமும் அனுமதிக்காது. இந்த ராதிகா குமாரசாமி தனது பிரதிநிதி Patrick Cammaertயை இலங்கைக்கு அனுப்ப இருப்பதாகச் சொல்லி ஒருமாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அவருக்கான பயண அனுமதியை வழங்குவதில் இலங்கை அரசு இழுத்தடிப்புச் செய்து கொண்டிருந்தது. அதற்கு எதிராக ராதிகா கண்டனமோ கவலையோ தெரிவிக்கவில்லை.

சில நாடுகளின் போக்கு இலங்கைக்கு சாதகமாக இல்லை என்று அறிந்தவுடன் ராதிகாவும் இலங்கையும் டிசெம்பர் 5-ம் திகதி Patrick Cammaertஐ அனுப்புவதாக ஒந்துக்கொண்டனர். இதற்கிடையில் வன்னிமுகாம்களில் இருந்த பலர் காணமற் போய்க் கொண்டே இருக்கின்றனர். பலர் வேறு மீள் குடியேற்றம் என்ற போர்வையில் வேறு முகாம்களில் அடைக்கப் படுகின்றனர். இன்னும் பலர் அவர்களுக்கு முன்பின் தெரியாத இடங்களில் கொண்டு போய் வேண்டு மென்றே நள்ளிரவில் இறக்கிவிடப் பட்டு பேரவலத்து உட்படுத்தப் படுகின்றனர்.

சென்ற வாரம் மட்டுமே 39,000 பேர்கள் மீள் குடியேற்றம் செய்யப் பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான ஆணையாளர் Andrej Mahecic அவர்கள் அறிவித்துள்ளார். ஒருவாரத்தில் இவ்வளவு தொகை மக்கள் மீள் குடியேற்றப் படுவது இலங்கை அரசின் அவசரத்தை எடுத்துக் காட்டுகிறது. ஏன் இந்த அவசரம். மக்களின் அவலத்தை நீக்கவா அல்லது பலதரப்பில் இருந்து வரும் கண்டனங்களை தவிர்க்கச் செய்யும் கண்துடைப்பா? அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீஎஸ்பி+ வர்த்தகச் சலுகையைப் பெற ஆடும் நாடகமா?

வாரமொன்றுக்கு 39000 பேர் என்றவகையில் போனால் டிசெம்பர் -4ம் திகதிக்கு முன் வன்னிமுகாம்களில் உள்ள சகலரும் "விடுவிக்கப்" பட்டு விடுவார்கள். ராதிகா குமாரசாமியின் பிரதிநிதி வந்து இலங்கைக்கு நற்சான்றிதழ் கொடுத்துவிடுவார். மீள் குடியேற்றப் பட்டவர்களின் நலனுக்கு என்று பெருந்தொகைப் பணத்தை பல்வேறு தரப்பினர்களிடமிருந்தும் பெற்றுக் கொள்ளும். இலங்கை அரசு "மீட்கப்பட்ட" பிரதேசங்களில் இந்த ஆண்டு மே மாதத்திலிருந்தே அவசர அவசரமாகச் செய்யும் வேலைகள் இரண்டு. ஒன்று பௌத்த விகாரைகள் கட்டுவது அடுத்தது பாரிய சிறைச் சாலைகள் கட்டுவது. ராதிகா குமாரசாமியின் பிரதி நிதியின் பயணத்தைத் தொடர்ந்து பன்னாட்டு பாராட்டைப் பெற்றபின் மீண்டும் பல்லாயிரக் கணக்கான மக்கள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப் பட்டு இச்சிறைகளில் அடைக்கப் படுவார்கள்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...