Sunday, 25 October 2009

பேராசிரியர் செல்லனி: இந்தியாவின் தேயும் வல்லாதிக்கம்.டில்லி கொள்கை ஆய்வு மையத்தின் தந்திரோபாயக் கற்கைக்கான பேராசிரியர் பிரம்ம செல்லனி அவர்கள் இலங்கை போரில் தமிழர்களை வெற்றியடைந்தது இந்தியாவின் வல்லாதிக்கம் தேய்வதைக் காட்டுவதாகக் குறிபிட்டுள்ளார். ஆயிரக்கணக்கானொரை கொன்று குவித்து தமிழ்ப் புலிகளை வெற்றிகொண்டு ஐந்து மாதங்கள் கடந்த பின்னும் அமைதி என்பது கிடைக்கத ஒன்றாகவே காணப்படுகிறது என்கிறார் அவர். பேராசிரியர் தொடர்ந்து தெரிவிப்பதின் சாராம்சம்:

 • இலங்கையில் போரை முடிவிற்கு கொண்டுவருவதை தீர்மானிக்கும் காரணியாக சீனாவே தனது ஆயுத மற்றும் பண உதவிகளால் இருந்தது. அத்துடன் தனது நண்பன் பாக்கிஸ்த்தானையும் ராஜபக்சேயிற்கு உதவச் செய்தது.
 • இப்போது ஐநாவின் போர்க்குற்ற விசாரணைகளுக்கும் இலங்கைக்கான சிறப்புப் பிரதிநிதியை ஐநா நியமிப்பதற்க்கும் எதிரான பாதுகாப்பாக சீனாவே இருந்து வருகிறது.
 • சீனாவின் உதவியைப் போல் அல்லாது இந்தியாவின் உதவி சர்வதேச அவதானங்களை ஈர்க்கவில்லை. ஆனால் இந்தியாவும் இலங்கையின் இரத்தக் களரிக்கு இராணுவ உதவிமூலம் பங்காற்றியது. இருந்தும் இலங்கைமீதான இந்தியாவின் பிடி விநோதமாக தளர்ந்து போனது.
 • மோசாமன விளைவுகளை ஏற்படுத்திய 1987-1990 காலத்தியஅமைதிப் படை நடவடிக்கையின் பின்னும் அதைத் தொடர்ந்து இடம் பெற்ற புலி உறுப்பினர் ஒருவர் செய்த இராஜீவ் காந்தி கொலையின் பின்னும் இந்தியா இலங்கைமீது ஒரு தலையிடாக் கொள்கையை கடைப் பிடித்தது. ஆனால் சீனா இலங்கையைமீது தனது தந்திரோபாயமான பிடியை அதிகரித்துக் கொண்டது.
 • பின்னர் இந்தியா தனது கொள்கையை மாற்றிக் கொண்டது. இலங்கையில் மனிதாபிமானப் பிரச்சனைகள் மோசமடைந்து கொண்டே போய்க் கொண்டிருந்த வேளையில் இந்தியா கட்டற்ற இராணுவக் கடன்கள் வழங்குவதில் இருந்து கடற்படை மற்றும் உளவுத் தகவல்கள் வரை இலங்கைக்கு வழங்கி வந்தது. இலங்கைக் கடறபடை அதிகாரி வசந்த கரன்னகொட புலிகளின் கடற்கலன்களை ஒன்றன் பின் ஒன்றாக இந்தியாவின் உதவியுடன் தாம் அழித்ததாகக் கூறினார்.
 • ஆனால் இலங்கையோ தனது பணியை தந்திரமாகவும் சாதுரியாமாகவும் மேற்கொண்டது. இந்தியாவிற்குத் தெரியாமல் ஆயுதங்களை வாங்கிக் குவித்தது. அன்றிலிருந்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை இந்தியாவின் நீண்டகால நலன்களை கருத்தில் கொள்ளாமல் அதிகாரத்தில் உள்ளவர்களின் தனிப்பட்ட விருப்பங்களை கருத்தில் கொண்டது. இந்தியாவின் கொள்கைத் தடுமாற்றம் கிழட்டு நரி ஜே. ஆர் ஜெயவர்த்தனேயால் ராஜீவ்காந்தி மீது திணிக்கப் பட்டது. அதன் படி ஈழம் என்பது இந்தியாவிற்கு ஏற்புடையதல்ல. ஈழம் நாளடைவில் தமிழ்நாட்டையும் இணைந்த பரந்த ஈழமாக மாறும் என்றதை இராஜீவ்காந்தி உள்வாங்கிக்கொண்டார். அன்று பிரிந்த வங்காள தேசம் ஏன் பரந்த வங்காள தேசத்தை உருவாக்கவில்லை? இப்படி இருக்கையில் ஈழம் மட்டும் ஏன் பரந்த ஈழத்தை உருவாக்கும்?
 • அடுத்த இந்தியக் கொள்கை மாற்றம் 2004இல் இந்தியாவில் ஏற்பட்ட ஆட்சியால் ஏற்படுத்தப் பட்டது. இந்தியாவின் தந்திரோபாய கருத்துக்களில் இராஜீவ் காந்தியின் கொலைக்கான பழிவாங்கலும் உள்ளடக்கப் பட்டது. அது 2005இல் ஆட்சிக்கு வந்த ராஜபக்சேயின் இராணுவத் தீர்வுத் தெரிவுடன் பின்னிப் பிணைக்கப் பட்டது. இந்நிலையில் உதவியளிக்கவேண்டியது இந்தியாவின் கடமை என்றார் ராஜபக்சே.இந்தியாவின் உதவியும் தாராளமாக வந்தது.
 • இந்தக் கொள்கை (தடு)மாற்றம் ஐக்கியநாடுகளின் மனித உரிமைக் கழகத்தில் இலங்கைக்கு எதிராக மனித உரிமைமீறல் குற்றச் சாட்டைக் கொண்டுவந்த இந்திய வம்சா வழியினரான நவநீதம் பிள்ளையைக் கண்டிக்கும் வரை சென்றது.
 • இலங்கைக்கான இந்தியாவின் உதவிகளின் விளைவுகள் படு பாதகமானவை. இந்தியா தனது பின்புறத்தில் ஒரு பாரிய தந்திரோபாய இடைவெளியை சீனாவிற்கு ஏற்படுத்தி விட்டது. இலங்கையில் ஓரங்கட்டப் பட்ட பங்களானாக தன்னை மாற்ற தானே வழிவகுத்தது.
 • இராஜீவ் காந்தியின் மனதில் ஜே ஆர் ஜெயவர்த்தனே விதைத்த வினை பல தொடர் நிகழ்விகளை ஏற்படுத்தி இன்றும் இந்தியாவிற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது. இலங்கைக் கொலைகளுக்கும் முகாம்களில் அடைப்பதற்கும் இந்தியாவில் வாழ்தமிழர்களின்பதிலடி இன்மையால் இலங்கை இனக்கொலையின் உச்சக் கட்டத்தில் தமிழ்நாட்டில் ஐக்கிய முற்போக்கு அணிக்கு தமிழர்கள் வாக்களித்தனர்.
 • இப்போது இலங்கை முன்பிலும் பார்க்க அதிகமாக இந்தியாவிற்கு செவிசாய்க்க மறுக்கும்.
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...