Wednesday 28 October 2009

போர் குற்றம் என்பது என்ன? இலங்கை போர் குற்றம் புரிந்ததா?


போர்க்குற்றம்
போர் குற்றம் என்பது போரில் கைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளையோ பழக்கங்களையோ மீறும் செயலாக வரையறுக்கப்படுகிறது. அவ்வாறான சில விதிமுறை மீறல்களில் கொலை, வலிந்து கவரப்பட்ட நிலப்பரப்பில் குடியிருக்கும் அப்பாவி குடிமக்களை சரிவர நடத்தாதல் மற்றும் அவர்களை வதை முகாம்களுக்கு குடியேற்றல், போர் பிணையாளர்களை கொலை செய்தல் அல்லது சரிவர நடத்தாதல், பிணையாளர்களை கொல்லுதல், இராணுவ அல்லது குடிசார் தேவை ஏதும் இல்லாத நிலையில் ஏதேனும் அழிவுகள் மற்றும் நகர்ப்புறங்களையோ அல்லது நாட்டுப்புறங்களையோ அழித்தல் என்பனவும் உள்ளடங்கும்.


இலங்கை செய்த போர்க்குற்றங்கள்
போரில் கைப்பிடிக்கவேண்டிய வற்றை இலங்கை மீறியதா?
  • வேறுபட்ட மனித உரிமை அமைப்புக்கள் அமெரிக்கத் தூதுவரகத்திற்கு வழங்கிய தகவல்களின்படி இலங்கை அரசு போரில் சிக்குண்ட மக்களுக்கு உணவு மற்றும்மருந்துப் பொருட்கள் கொண்டு செல்லப் படுவதை இலங்கை அரசு தடுத்தது நிரூபணமாகியுள்ளது.
  • பாதுகாப்பு வலயம் என்று இலங்கை அரசு அறிவித்த பகுதிகளில் இலங்கை அரச படைகள் குண்டுகள் வீசியதற்கு போதுமான சாட்சியங்கள் உண்டு.
  • போரின் இறுதிநாளில் சரணடையச் சென்ற விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவினர் கொன்றொழிக்கப் பட்டமை போர்க்குற்றமாகும். இதற்கு ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளும் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்மும் சாட்சியங்களாகும்.
  • வன்னி முகாம்களிலிருந்து மக்கள் அடிக்கடி காணமல் போகுதல் போர்க் குற்றமாகும். வன்னி முகாமில் இருந்து தப்பிவந்த இளம் பெண் ஒருவர் ஊடகங்களுக்கு வழங்கிய தகவல்களின் படி காணாமற்போனவர்களைத் தான் சடலமாகக் கண்டதாகவும் சிறுவர்களை உந்துருளியில் வந்து கடத்திச் செல்வதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.

கீழே உள்ள காணொளிகளின் இணைப்புகள் இலங்கையின் போர்குற்ற மீறல்களுக்கான ஆதாரங்களை எடுத்துச் சொல்கின்றன. சில விளம்பரங்களுடன் ஆரம்பிக்கின்றன. அங்கு மீண்டும் சொடுக்கினால் உரிய காணொளிகள் ஆரம்பிக்கும்.
இவை போன்ற பல காணொளி ஆதாரங்கள் உண்டு.
காணொளி - 1
காணொளி - 2
காணொளி - 3
காணொளி - 4

இன்னும் பல சாட்சியங்கள் வன்னி முகாம்களில் மறைந்திருக்கின்றன. பல மறைக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...