Monday 12 October 2009

தமிழ்மக்களின் அசட்டை: அதிர்ச்சியடைந்த இந்திய அதிகாரிகள்.


இந்திய வெளியுறவுத் துறையின் பணிகளில் ஒன்று இலங்கைத் தமிழர்களை தமக்குச் சார்பாகத் திருப்புவது. இதன் நோக்கம் இலங்கையின் சிங்களப் பகுதிகளைச் சீனா சாப்பிட அதன் எச்சமான தமிழ்ப் பகுதிகளை இந்தியா தன் வசமாக்குதல் என்பதே. இதற்காகத் தமிழ் மக்களை ஏமாற்றி சிங்களமக்கள் கோபப்படாமல் தமிழ் மக்களை இந்தியாவின் வசமாக்கும் முயற்ச்சியில் இந்தியா பலமுனைகளில் காய் நகர்த்தி வருகிறது.

தமிழ் மக்களைத் தம் வசமாக்கும் ஒரு முயற்ச்சியாக டி. ஆர். பாலு தலைமையிலான ஒரு குழுவை இந்தியா இலங்கைக்கு அனுப்பியுள்ளது. ஆனால் இந்த குழுவின் பயணத்தை தமிழர்கள் சந்தேகக் கண்கொண்டே பார்க்கின்றனர். பல நடுநிலை தமழ் ஊடகங்கள் இக்குழுவின் பயணத்தை தாக்கியே எழுதுகின்றன. தமிழ் மக்கள் இந்தக் குழுவின் பயணத்தை அசட்டை செய்தது கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரக அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தமிழ் மக்களைக் கவர்வதெற்கென்று உள்ளடக்கப் பட்ட கனிமொழியும் திருமாவளவனும் தமிழர்களை கவரத் தவறி விட்டனர்.

பரம எதிரி இந்திரா காங்கிரசு
தமிழ் மக்கள் தமது பரம் எதிரியாக ஆளும் இந்திரா காங்கிரசையும் அதன் பார்ப்பன அதிகாரிகளையும் பார்க்கத் தொடங்கி பல காலம் ஆகி விட்டது. இதை இந்திய ஆட்சியாளர்கள் ஏன் உணர மறுக்கின்றனர்?

உண்மை அறியாத டி. ஆர். பாலு
இலங்கை அரசு தமக்கு முகாம் மக்களை சந்திக்க எந்தத் தடையும் விதிக்கவில்லை என டி. ஆர் பாலு கூறினார். ஆனால் அவர்களுக்கு ஏற்கனவே என்ன கூற வேண்டும் என்று இலங்கை அரசு உத்தரவு இட்டிருக்க மாட்டாதா? அப்படி மீறி ஏதாவது கதைத்திருந்தால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை பாலு அறியார் ஆனால் நாம் அறிவோம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...