Monday 5 October 2009

இலங்கைமீது தொடரும் குற்றச் சாட்டுக்கள்


ஐரோப்பிர ஒன்றியத்தின் இலங்கைக்கான GSP+ வர்த்தகச் சலுகை நீடித்தல் தொடர்பான விசாரணைகளின் போது இலங்கையின் மீது பல குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப் பட்டுள்ளன. GSP+சலுகையைப் பெறுவதற்கு என்று சில நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும். அதில் முக்கியமானது 27 சர்வதேச உடன்படிக்கைகளில் சலுகை பெறமுயலும் நாடு கையொப்பமிட்டிருக்க வேண்டும். அந்த உடன்படிக்கையை மதித்து பின்பற்றி நடக்க வேண்டும். அவற்றில் முக்கியமானவை மனித உரிமைகள் சம்பந்தமானது. அந்த 27இல் மூன்று உடன்படிக்கையை இலங்கை மீறியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் முன் இலங்கைமீது ஒரு அறிக்கை மூலம் குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
  1. International Covenant on Civil and Political Rights (ICCPR),
  2. Convention Against Torture and other Cruel, Inhuman, or Degrading Treatment or Punishment (CAT)
  3. Convention on the Rights of the Child (CRC)
ஆகிய மூன்று உடன்படிக்கைகளை இலங்கை மீறியுள்ளதாக இலங்கை மீது குற்றம் சுமத்தப் பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக அவர்கள் எடுத்துக் காட்டிய விடயங்கள்:
  • குற்றம் சுமத்தம் படுபவரை நிரபராதி என்று நீதிமன்றம் பார்ப்பதில்லை. நீதிமன்றத்தில் நிறுத்தப் படும் ஒருவர் நீதிமன்றத்தில் நிரூபிக்கப் படும் வரை அவரை நீதிமன்றம் நிரபராதியாகப் பார்ப்பது வழக்கம். தற்போது இலங்கையில் உள்ள அவசரகாலச் சட்டம் அதற்கு இடமளிப்பதில்லை.
  • இலங்கை குடியரசுத் தலைவரின் தலையீடுகள். இலங்கை அரசியலமைப்பின் 17வது திருத்தம் அமூல் செய்யப் படாமையினால் இலங்கையின் நீதித்துறையிலும் நிர்வாகத்துறையிலும் காவற் துறையிலும் ஆட்சியாளர்களின் தலையீடு அதிகரித்துள்ளது. இலங்கை அரசியலமைப்பின் 17வது திருத்தம் காவற்துறை, நீதித்துறை, நிர்வாகத்துறை ஆகியவற்றை நிர்வகிக்க ஒரு சுதந்திர ஆணைக்குழு அமைக்கப் படவேண்டும் என்று கூறுகிறது.
  • அதிகரிக்கும்கொலைகள். இலங்கையில் நடக்கும் நூற்றுக்கணககான கொலைகளுக்கு உரிய விசாரணைகளை காவற்துறை மேற்கொள்வதில்லை. அத்துடன் கடத்தல்கள் காணாமற் போதல்கள் அதிகரித்துள்ளன. இதுதொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் கருணாவின் நடவடிக்கைகளும் குறிப்பிடப் பட்டுள்ளன. அரசியல் ரீதியிலான ஆர்வமின்மை காரணமாக இலங்கையில் பல குற்றச் செயல்கள் தண்டிக்கப் படாமற் போகின்றன என்று குற்றம் சுமத்தப் பட்டுள்ளது. சட்டமா அதிபரை குடியரசுத் தலைவர் அரசியலமைப்புக்கு முரணான வகையில் நியமித்ததையும் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
  • அதிகரித்தநீதித்துறையில். அரசியல் தலையீடுகள் அதிகரித்தமையே காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
  • அரசியல் மயமாக்கல். இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பு தேறமைக்கு இலங்கையின் நீதித்துறை அரசியல் மயமாக்கப் பட்டமையே காரணம்.
  • பலவீனமான நீதித்துறை. இலங்கையின் நீதித்துறை அரசினாலும் பிரதம நீதியரசரினாலும் பலவீனப் படுத்தப் பட்டுள்ளது. முன்னாள் நீதியரசர் அரசியல் மயமான வழக்குகளை சில மூத்த நீதிபதிகள் கையாளாமல் பார்த்துக் கொண்டார்.
  • அவசரகாலச் சட்டம். இலங்கையில் உள்ள அவசரகாலச் சட்டம் மக்களுக்கு சரியானவகையில் நீதிகிடைப்பதை தடை செய்கிறது.
  • சட்டத்திற்கு புறம்பான கொலைகள். இலங்கை ஆயுதப் படைகளாலும் காவற்துறையினராலும் அரசுடன் தொடர்புடைய குழுக்களாலும் மேற்கொள்ளப் படும் சட்டத்திற்கு புறம்பான கொலைகள் இலங்கையில் உள்ள மிகப் பெரும் பிரச்சனையாகும்.
  • ஊடகங்கள் மீதான தாக்குதல்கள். ஊடகங்கள் மீதும் ஊடகத்துறையினர் மீதும் எண்ணற்ற தாக்குதல்கள் நடக்கின்றன.
  • சித்திரவதை ஒரு வழமையான நடைமுறை. இலங்கை அவசரகாலச் சட்டத்தின் கீழ் காவற்துறை சந்தேக நபர்களைக் கைது செய்து சித்திரவதைசெய்வது என்பது ஒரு வழமையான நடைமுறை ஆகிவிட்டது.
  • கைது செய்தலும் தடுத்து வைத்திருதலும். இலங்கையில் மக்கள் எழுந்தமான மாகக் கைது செய்யப் பட்டுத் தடுத்து வைக்கப் படுகின்றனர்.
  • காணாமற் போவோர். டிசெம்பர் 2005. இற்கும் டிசெம்பர் 2007இற்கும் இடையில் 1500 பேர்வரை காணாமற் போயுள்ளனர்.
  • கருத்துச் சுதந்திரம். இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தை நடைமுறைப் படுத்துவது என்பது மாபெரும் பிரச்சனையாகி உள்ளது.
  • பாரிய தடுத்து வைப்பு. இலங்கியில் பெருந்தொகையானோர் சுதந்திர நடமாட்டமின்றித் தடுத்து வைக்க்ப்பட்டுள்ளனர்.
  • பாராபட்சத்திற்கு எதிரான பாதுகாப்பு. இலங்கையின் தேசிய சிறுபான்மை இனங்கள் குறிப்பாக தமிழினம் பாராபட்சத்திற்கு எதிரான பாதுகாப்பு இன்றியே காணப்படுகிறது.
மேற்கூறப்பட்ட குற்றச் சாட்டுகள் உண்மையானதும் நியாயமானதும் என்பதை இலங்கையைப் பற்றி அறிந்த சகலரும் உணர்வர். ஐரோப்பிய ஒன்றியம் GSP+ வர்த்தகச் சலுகை சம்பந்தமாக எப்படித் தீர்மானிக்கப் போகிறது?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...