Monday 7 September 2009

இலங்கையில் இறுகும் சீனப் பிடியை இந்தியா ஏன் புறக்கணிக்கிறது?


இந்திய முதலாளிகளை மேற்கத்திய முதலாளிகளிடமும் உள்ளூர்த் தரகு முதலாளிகளிடமும் பொதுவுடமைவாதிகளிடமிர்ருந்தும் பாதுகாப்பதில் இந்திராகாந்தி பெரும் பிரயத்தனம் எடுத்தார். இதற்காக அவர் மும் முனைகளில் செயற்பட்டார். ஒன்று கூட்டுச் சேராநாடுகள் அமைப்பில் முக்கிய பணியாற்றினார். அதனால் மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் இந்தியாவிற்கு பல நண்பர்களை ஏற்படுத்தினார். மற்றது மேற்கு நாடுகளின் எதிரியான சோவியத் யூனியனின் நண்பரானார். அத்துடன் அவர் நிற்கவில்லை உள்ளூர் பொதுவுடமைவாதிகளை ஒழிப்பதில் அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட்டார். அதனால் பன்னாட்டு அரங்கில் இந்தியாவின் செல்வாககை சற்று நிமிர்த்தினார்.

எங்க "ஏரியா" உள்ளே வராதே!
இலங்கையை இந்திராகாந்தி தனது பிராந்திய ஆதிக்கத்துள் வைத்திருக்க விரும்பினார். இலங்கை திருமலையில் அமெரிக்கா எண்ணை நிரப்பு வசதிகளைப் பெற முயன்றபோது கொதித்தெழுந்தார். தமிழர்களை இலங்கை அரசிற்கு எதிராக ஆயுதமேந்திப் போராடச் செய்தார். 1984இல் அலன் தம்பதிகள் தமிழ்ப் பேராட்டக்குழு ஒன்றினால் கடத்தப் பட்டபோது அவர்களைத் தேட அமெரிக்க விமானம் ஒன்று கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்து இறங்கியது. இதை அறிந்த இந்த்திரா காந்தி அம்மையார் அவ்விமானம் எந்தத் தேடுதல் நடவடிக்கையிலும் ஈடு படக்கூடாது என்று இலங்கையை எச்சரித்து அந்த விமானத்தைப் பறக்காமல் செய்தார். அவ் விமானம் பறப்பில் ஈடுபட்டால் இந்தியக் கரையோரப் பகுதிகளை வேவு பார்க்கக் கூடும் என்றே இலங்கையை மிரட்டிப் பணிய வைத்தார். தமிழ்த்தேசிய வாதிகளின் பக்கபலத்தால் இதை அவரால் சாதிக்க முடிந்தது. தனது கொல்லைப் புறம் தனது கட்டுப் பாட்டுக்குள் இருக்கவேண்டும் என்பது இந்திராகாந்தியின் கொள்கை.

இப்போது சீனா இலங்கியில் பலவகையில் தனது பிடிகளை இறுக்குகிறது.
இலங்கைக்கு பண உதவி வழங்கும் நாடுகளில் சீனா முதலாமிடத்தில் நிற்கிறது.
இலங்கைக்கு பெருமளவு ஆயுத விற்பனையையும் உதவியையும் சீனா செய்கிறது. சீனா தனது ரத்து(வீட்டோ) அதிகாரத்தைப் பாவித்து ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் மனித் உரிமை தொடர்பாக பாதுகாப்புச் சபை விவாதிக்காமல் பார்த்துக் கொண்டது. எல்லாவற்றிலும் மேலாக சீனா அம்பாந்தோட்டையில் அமைத்துக் கொண்டிருக்கும் துறைமுகம் அமைகிறது.

இதைப்பற்றி இருமுறை குன் ஜன் சிங் இந்தியாவை எச்சரித்துள்ளார். ஒன்று 2009 ஜூனில் மற்றது ஆகஸ்டில்:

“This increasing closeness between Colombo and Beijing is a reason for concern for New Delhi. During the construction of the (Hambantota) port a large number of Chinese experts are to be expected to be present in the region and this is proving to be a security concern for the Indian side.”

ஆனால் பி. இராமனோ அல்லது கேணல் ஹரிகரனோ சீனப் பிடி இலங்கையில் இறுகுவதை பெரிதாக எடுக்கவில்லை. கேணல் ஹரிகரன் இப்படிக் கூறுகிறார்:
While India should not 'worry' on each specific Chinese action, it should be concerned about any factor potentially destabilizing to its strategic security, introduced in its area of influence.

ஏன் ஹரிகரனும் இராமனும் இலங்கை-சீன உறவை பெரிது படுத்துவது இல்லை. இலங்கையில் தமிழ்த் தேசியத்தை ஒழிக்க இந்தியால் மட்டும் முடியாது சீன உதவியும் தேவை என்று அவர்கள் கருதுகிறார்கள். இந்தியக் கொள்கை வகுப்பாளர்களாக இருக்கும் சாதி வெறியர்களும் இதைத்தான் நினைக்கிறார்கள். இலங்கைக்கு தமிழ்த்தேசியவாதத்தை ஒழிக்க சீனாவும் உதவட்டும். ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புக்களில் இலங்கைக்கு ஆதரவாக காத்திரமான உதவிகளைச் செய்ய இந்தியாவால் முடியாது. அது ரத்து(வீட்டோ) அதிகாரமுடைய சீனவால் மட்டுமே முடியும் என்று இந்த சாதிய வெறி பிடித்த சில டெல்லிக் கொள்கை வகுப்பாளர்களும் ஆலோசகர்களும் நினைத்ததின் விளைவே இந்தியா சீனாவின் செல்வாக்கை இலங்கையில் அதிகரிக்க உதவியது. இவர்களுக்கு தமது சாதிய நலனே இந்தியத் தேசிய நலனிலும் பெரிது. சாதியத்தை ஒழித்துக் கட்டிய தமிழ்த்தேசிய போராட்டம் வெற்றியடைவதை இவர்கள் விரும்பாமல் போனதுதான் இதற்குக் காரணம்.

1 comment:

Anonymous said...

Because Indian strategists and diplomats are narrow minded and short sighted. They are no match to the farsightedness of Chinese diplomacy. Until recetly, they justified supporting Rajapakse for controlling Chinense influence on him. Now that LTTE is gone, China is tightly embracing Rajapakse.

What trumpcard does India has to prevent this? Are they going to rekindle Eelam fight one more time?

Stupid Indian diplomacy. Now they have the ire of Tamils on either side of Palk Strait.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...