Thursday 10 September 2009

அடுத்த பனிப்போர் இலங்கையை மையம் கொண்டு ஆரம்பிக்குமா?

படத்தை பெரிதாக்க படத்தில் சொடுக்கவும்.

அமெரிக்காவை இலக்கு வைத்து சோவியத் ஒன்றியம் கியூபாத்தீவில் அணு ஆயுதங்களை 1960களில் குவித்தபோது இரு பெரும் வல்லரசுகளுக்கும் இடையில் அணு ஆயுதப் போர் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது. கியூபாவை அமெரிக்கா கடல் முற்றுகைக்கு உள்ளாக்கியது. சோவியத் ஒன்றியம் பெரும் படையணிகளை அங்கு நகர்த்தியது. பின்னர் சோவியத் ஒன்றியம் அணு ஆயுதங்களை அகற்ற சம்மதித்தது. பின்னர் இரு நாடுகளும் ஒன்றை ஒன்று அறிக்கைகள் மூலம் மிரட்டும் பனிப் போர் திவிரமடைந்தது.

இந்தியாவின் அணுஆயுதங்கள் தாங்கிய ஏவுகணைகள் பாக்கிஸ்த்தானின் சகல பகுதிகளையும் தாக்கும் வல்லமையுடையன. ஆனால் பாக்கிஸ்த்தானின் அணுஆயுதங்கள் தாங்கிய ஏவுகணைகள் இந்தியாவின் வடமாநிலங்களை மட்டுமே தாக்கக் கூடியன. இது சீன-பாக்கிஸ்த்தான் கூட்டைப் பொறுத்தவரை ஒரு பாதாகமான நிலைப் பாடு. இதைச் சம நிலைப் படுத்த சீன-பாக் கூட்டமைப்பிற்கு இலங்கை தேவைப் படுகிறது. சீனாவால் இந்தியாவின் தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்த தனது தொலைதூரத் தாக்குதல் திறனை அல்லது கடற்படை வலுவை பாரிய அளவில் அதிகரிக்க வேண்டும். இதனால் அடுத்த இருபது ஆண்டுகளில் உலகின் பெரும் வல்லரசாக மாறமுயலும் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டியில் பெரும்பகுதி இலங்கையை மையப் படுத்தி நடக்கவிருக்கிறது. இதன் தாக்கங்களை கடந்த ஐந்து வருடங்களாக உணரக்கூடியதாக இருக்கிறது. இதன் ஒரு அம்சமே இவ்விரு நாடுகளும் ஒன்றுக் கொன்று போட்டியாக தமிழினக் கொலைக்கு உதவி வருகின்றன. இதன் விளைவாகவே இலங்கையும் தனது வெளியுறவுக் கொள்கையில் மேற்கு நாடுகளைப் புறந்தள்ளி சீனாவின் தீவிர நண்பனாக மாறி வருகிறது. இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் நாடுகளில் சீனா ஜப்பானை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி தான் முதலிடத்தை வகிக்கிறது. அந்நியச் செலவாணி இருப்பில் உலகில் முதலாமிடத்தில் இருக்கும் சீனாவுடன் 162-ம் இடத்தில் இருக்கும் இந்தியா இந்த விடயத்தில் போட்டிபோட முடியாது. சிங்கள மக்களைப் பொறுத்த வரை இந்திய நட்பிலும் சீன நட்பை அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் இப்போதைய சூழலில் தமிழ்த்தேசியம் முற்றாக துடைத்தழிக்கும் வரை இதை வெளிகாட்ட விரும்பவில்லை.

இனக்கொலைப் போரில் இலங்கைக்கு இந்தியா சீனா பாக்கிஸ்த்தான் ஆகிய மூன்று நாடுகளும் பேருதவி வழங்கின. இப்போது இலங்கை கைமாறு செய்ய்யும் வேளை வந்துவிட்டது. இலங்கை பாக்கிஸ்த்தானுக்கு வழங்க விருக்கும் கைமாறு என்ன? இலஙகையில் பாக்கிஸ்த்தானிய இராணுவத்தினருக்கு பயிற்ச்சி அளிப்பது என்ற போர்வையில் கிளிநொச்சியில் பாக்கிஸ்த்தானிய இராணுவ முகாம் அமையுமா? அப்பயிற்சிக் கல்லூரியில் சீன இராணுவ நிபுணர்கள் பணிபுரிவார்களா? அங்கு பாக்கிஸ்த்தானில் இருந்து தென் இந்தியாவிற்கு பேரழிவு விளைவிக்கக் கூடிய ஆயுதங்கள் குவிக்கப் படுமா? 1960களில் கியூபாத்திவில் நடந்தது வரும் காலத்தில் இலங்கையில் நடக்குமா? ஆக மொத்தத்தில் தமிழர் தாயக பூமியை மையப் படுத்தி ஒரு பெரும் வல்லாதிக்கப் போட்டி நடக்கிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...