Friday 4 September 2009

பதவியைத் தக்க வைக்கத் துடிக்கும் பான் கீமூன்


மெனிக் பாம் முகாமைப் பார்வையிடும் பான்.


ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் பதவிக் காலம் இரண்டரை ஆண்டுகளைத் தாண்டி விட்டது. அவரின் மொத்த பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அது முடிய இன்னும் ஒரு ஐந்து ஆண்டுகள் அவர் அப்பதவிக்கு தேர்வு செய்யப்படலாம். அவர் இப்போது அவரது பதவிக்காலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதற்கு இருவகையான சவால்களை எதிர் கொள்கின்றார். ஒன்று ஐ. நா ஊழியர்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பு மற்றது மேற்கு நாடுகளின் மத்தியில் இருக்கும் எதிர்ப்பு.

மோசமான முகாமைத்துவம்
பான் கீ மூன் மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை என்பதும் தனக்கு நெருக்கமான சில கொரிய ஆலோசகர்களுடன் மட்டும் நல்ல உறவு நிலையில் இருக்கிறார் என்பதும் அவருக்கு ஐநா ஊழியர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பைக் கிளப்பியுள்ளது. இதனால் அவரது முகாமைத்துவத் திறனுக்கு பத்துக்கு இரு புள்ளிகளை மட்டும் வழங்கியது தி எக்கொனமிஸ்ற் சஞ்சிகை. Joseph Nye from Harvard University suggests: "He might ask himself whether he's got the balance quite right on speaking up verses mediating.

"I think he might ask himself if he might do a little bit more on managing the institution."

சத்தமின்றிச் சாதிக்கிறாரா ஊமையாக இருக்கிறாரா?
பான் கி மூன் அமைதியாக இருந்து காரியத்தைச் சாதிக்கக் கூடியவர் என்று சிலர் அவரைப் பற்றி கருத்துத் தெரிவித்தனர். தி எக்கொனமிஸ்ற் சஞ்சிகை என்பது மேற்குலக முதலாளித்துவப் பத்திரிகை என்று விட்டாலும். அல்ஜாசீரா அவர் ஊமையாக இருக்கிறார் என்று கருத்து வெளியிட்டது. அதன் கருத்து இப்படி வந்தது: "There's a difference between quiet diplomacy and non-existent diplomacy, or silent diplomacy, which is what we have at present."

இலங்கையில் விட்டது இமாலயத் தவறு.
போரை நிறுத்துவது, போரில் அகப்பட்ட பொது மக்களைப் பதுகாப்பது, போரில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ வசதிகள் செய்வது, போரினால் இடம் பெயர்ந்தோருக்கு உதவுவது இவற்றில் எந்த ஒன்றையும் ஐநாவோ அதன் உப அமைப்புக்களோ சரியாக எதையும் செய்யவில்லை. போர் நடக்கும் போது இலங்கைக்கு செல்ல நேரமில்லை என்று தட்டிக் கழித்தமை, அனுப்பிய தூதர் (வில்லன்) விஜய் நம்பியார்( இவரின் சகோதரர் இலங்கையின் இராணுவ ஆலோசகர்) இலங்கைக்கு சென்று அங்கு பேச்சு வார்த்தை நாடாத்திவிட்டு உடன் ஐநா திரும்பி உரிய நடவடிக்கை எடுக்காமல் இந்தியா சென்று இலங்கைக்கு போரை முடிக்க கால அவகாசம் கொடுப்பது போல் நேரத்தை விணாக்கியமை. பின்னர் பாதுகாப்புச் சபைக்கு தனது பயணம் பற்றி அறிவிக்க நம்பியார் மறுத்தமை சரணடைய முயன்ற புலிகளின் அரசியல் துறையினரை பாது காக்கத் தவறியமை எல்லாமே இலங்கை விவகாரத்தில் பான் கீமூன் செய்த இமாலயத் தவறு.

நோர்வேயில் இருந்து வந்த குற்றச் சாட்டு.
சிறீலங்காவின் இராணுவ வெறியாட்டத்திற்கு அடிபணிந்தவர் ! பர்மீய இராணுவ ஆட்சியாளர் அடாவடித்தனத்தை அமைதியாகப் பார்த்தவர் ! பான் கி மூன் தனது பதவிக்குரிய ஆளுமை கொண்ட ஒருவரல்ல என்ற விமர்சனத்தை நோர்வேயின் ஐ.நா பிரதிநிதி முன்வைத்துள்ளார். பான் கி மூனின் பலத்த ஆளுமைக்குறைவை ஏற்கெனவே பலர் சுட்டிக்காட்டினாலும், இப்போது அது அம்பலமாகியுள்ளது. இதுவரை மௌனமாக இருந்த நோர்வே அவர் மீது விமர்சனத்தை முன் வைத்திருப்பது உலகின் கவனத்தைத் தொட்டுள்ளது. மேற்படி கடும் விமர்சனத்தை நோர்வேயின் ஐ.நா பிரதிநிதி மோனா யூல் தனது குறிப்புரையில் முன் வைத்திருந்ததாக நோர்வேயில் இருந்து வெளியாகும் ஆப்ரன் போஸ்டன் பத்திரிகை சுட்டிக்காட்டியது.

பா. சரவணமுத்து
ஐ.நா. செயற்படும் விதம் குறித்து இலங்கையில் பெரும்பாலான மக் கள் ஏமாற்ற மடைந்துள்ளனர் என கருத்துத் தெரி வித்த மாற்றுக் இலங்கையின் கொள்கைகளுக்கான நிலை யத்தின் நிறைவேற்றுப் பணிப்பா ளர் கலா நிதி பாக்கியசோதி சரவணமுத்து, இலங்கை ஜனா திபதிக்குத் தொலைபேசி அழைப்பு களை விடுப்பது மற்றும் கூட்டறிக்கை களை வெளியிடுவது போன்ற ஐ.நாவின் நடவ டிக்கைகள் மாத்திரம் போதுமானவையல்ல எனத் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா.சபை யில் செய்தியாளர்களுக்குக் கருத்துத் தெரி விக்கையிலேயே இதனைத் தெரிவித்த அவர், இலங்கைக்கான விசேட பிரதி நிதி யொருவரை ஐ.நா. செயலர் பான் கீ மூன் நியமிக்கவேண்டும் என்றும் வேண்டு கோள் விடுத்துள்ளார். பா. சரவணமுத்தின் நாகரீகமான கிண்டல் பலரையும் திகைப்பில் ஆழ்த்தியது மட்டுமல்ல இலங்கை அரசையும் ஆத்திரமடையச் செய்தது.

மனம் மாறுகிறாரா பான் கீ மூன்
இலங்கை விவகாரம் தனது பதவி நீடிப்பிற்கு ஆபத்தாக முடியும் என்று பான் கீ மூன் இப்போது உணர்ந்துள்ளார். அவரது அண்மைக்கால அறிக்கைகள் இதை எடுத்துக் காட்டுகின்றன. தனது பதவி நீடிப்பிற்கு பான் கீ மூன் இப்போது இலங்கை அகதி முகாம்களில் இருக்கும் மக்களுக்கு அவர் காத்திரமாக எதையாவது செய்து காட்ட வேண்டும். இலங்கை இந்திய சீனக் கூட்டுக்கு எதிராக அவர் இதைச் சாதிக்க வேண்டும்.

3 comments:

ஆதித்தன் said...

செய்யவேண்டிய நேரத்தில் செய்யாமல், இனிச் செய்ய வாய்ப்புக்கள் தேடினாலும், அவருக்கு அவை குறைவாகவே கிட்டும். சம்பாதித்த “நல்ல”பெயர் மாறாது.

vasu balaji said...

பாவிப் பயபுள்ள இப்பவாவது ஏதாவது செய்யட்டும்.

geethappriyan said...

இந்த ஈனபிறவிக்ளைப் பற்றி எழுதும் போது அவன் இவன் என்றே எழுதலாம் தப்பில்லை.பிணம் தின்னிப் பயல்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...