Friday 28 August 2009

பிபிசியின் கபடம் - இலங்கைக் கொலைகளை மூடி மறைக்க உதவுகிறதா?


















உலகத்தில் மிக மோசமான செய்தி இரட்டடிப்பு இலங்கையில் கடந்த பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கின்றது. பத்திரிகையாளர்களுக்கு மிக ஆபத்தான நாடுகளின் இலங்கை முன்னணி வகிக்கின்றது. இலங்கை அரசிற்கு எதிராக செய்தி வெளியிடும் செய்தி நிறுவனங்கள் இலங்கையிற் செயற்பட முடியாமற் பண்ணப் படும் என்று இலங்கை பகிரங்கமாகவே அறிவித்தது. ராயட்டர் செய்தி நிறுவனம் இலங்கை அரசு கொடுக்கும் செய்திகளை மட்டுமே தெரிவிக்கின்றது. வன்னி வதை முகாம்களில் நடக்கும் வன்முறைகளை கற்பழிப்புக்களை வெளியிட்டதற்காக சனல்-4 இன் செய்தியாளர் கைது செய்யப் பட்டு வெளியேற்றப் பட்டார். அத்துடன் சனல்-4 தன் இலங்கைச் செயற்பாட்டை முடிக்கவில்லை. எங்கு செய்து இரட்டடிப்பு செய்யப் படுகிறதோ அங்கிருந்து செய்திகளைக் கொண்டுவருவதுதான் சிறந்த ஊடகத்தின் கடமை. தமிழர் பிரச்சனையைப் பொறுத்தவரை இதிலிருந்து பிபிசி தவறிவிட்டது.

யூதர்கள் கையில் பிபிசி?
மார்கரெட் தச்சரின் ஆட்சிக்கு முன்னர் பிபிசியில் சிறந்த முற்போக்குச் சிந்தனையுடைய ஊழியர்கள் பிபிசியில் இருந்தனர். மத்தியகிழக்கு போரில் இஸ்ரேலின் பல அட்டூழியங்களை பிபிசி வெளிக் கொணர்ந்தது. அப்போது பிபிசி இடது சாரிப் போக்குடையது சோவியத் சார்பானது என்ற குற்றச் சாட்டுக்கள் பிபிசி மீது சுமத்தப் பட்டது. இப்போது பிபிசியில் சுமத்தப் படும் குற்றச் சாட்டு அது யூதர்களின் கையில் விழுந்து விட்டது என்பதாகும். அது உண்மையா? அமெரிக்க சி.என்.என் பிபிசி ஆகியன தமக்கு எதிரானவை என் உணர்ந்துதான் அரபு மக்கள் அல்ஜசீரா தொலைக் காட்சியை ஆரம்பித்தனர் என்றும் கூறப் படுகிறது.

பிபிசியின் கபடம்.
நேற்று பிபிசியானது, சனல்-4 தொலைக்காட்சியின் தமிழர்களை நிவாணமாக்கி கண்களையும் கைகளையும் கட்டிப் போட்டு சுட்டுக் கொல்லும் காணொளி தொடர்பாக பிரித்தானியத் தூதுவர் நிஹால் ஜயசிங்கவைப் பேட்டி கண்டது. பொதுவாக சர்ச்சைக்குரிய விடயங்களைப் இப்படிப் பேட்டி காணும் போது மாற்றுக் கருத்து கொண்டவர்களையும் பேட்டி காணுவதை வழக்கமாக எல்லா தொலைக்காட்சி செய்திச் சேவைகளும் வழக்கமாகிக் கொண்டுள்ளன. ஆனால் நிஹால் ஜயசிங்கவைப் பேட்டி காணும் போது பிபிசி அதைச் செய்யாதது ஏன்?
இலங்கையின் இனக் கொலையைப் பற்றி அறிந்தவர்களையோ அல்லது குறிப்பிட்ட காணொளியை வெளிக் கொண்டு வந்த ஊடக அமைப்பைச் சேர்ந்தவர்களையோ ஏன் பேட்டி காணவில்லை? இலங்கை அரசு தனது பிரச்சாரத்திற்கு பெருந்தொகையைச் செலவிடுவதை நாம் அறிவோம்.

பேட்டி காணும் போது முதற் கேள்விக்கு ஏற்கனவே மனப் பாடம் செய்துவைந்திருந்து ஒப்புவிக்கும் மூன்றாம் வகுப்புப் மாணவன் போல் தன் பதிலை ஒப்புவித்தார். இது இலங்கை அரசிற்கு தனது பரப்புரையை மேற்கொள்ள பிபிசி மேடை அமைத்துக் கொடுக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

குறித்த காணொளி என்று, எப்போது, எங்கு எவரால் பதியப் பட்டது, கொல்வது யார், கொல்லப் படுவது யார் என்பது தெரியாதென்று நிஹால் ஜயசிங்க பதிலளித்தார். பிபிசி செய்தியாளர் அதில் உள்ளவர்கள் இலங்கை இராணுவம் போல் உடையணிந்துள்ளனரே என்று கேட்டதற்கு விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவம் போல் உடையணிந்து செயற்படுவது எல்லோரும் அறிந்த விடயம் என்றார் நிஹால் ஜயசிங்க.

ஊடகங்களை சுதந்திரமாகச் செயற்பட அனுமதித்தால் இது தொடர்பான பிரச்சனை எழாது என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த நிஹால் ஜயசிங்க அங்கு பிரித்தானியாவின் டெய்லி ரெலிகிறாf இனதும் மெயில் ஒன் சண்டேயினதும் பத்திரிகையாளர்களை அங்கு தான் அழைத்துச் சென்றதாகவும் பத்திரிகையாளர்கள் அங்கு அனுமதிக்கப் படுவதில்லை என்பது உண்மையில்லை என்றும் புரட்டினார். டெய்லி ரெலிகிறாf இனதும் மெயில் ஒன் சண்டேயினதும் இலங்கை அரசுடன் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்பதை பிரித்தானியா வாழ் தமிழர்கள் நன்கு அறிவர். இலங்கை அரசு தனது பிரச்சாரத்திற்கு பெருந்தொகையைச் செலவிடுவதை நாம் அறிவோம்.

பானையில் இருந்தது அகப்பையில் வந்தது -
தமிழர் சரித்திரம் முடிந்துவிட்டதாம்!

இன்னொரு மனித உரிமை தொடர்பான விசாரணை சம்பந்தமான கேள்விக்கு பதிலளிக்கையில் கேள்விக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல் இலங்கையில் தமிழ்ர்களின் சரித்திரம் முடிந்து விட்டது என்றார் நிஹால் ஜயசிங்க. பின்னர் தன்னைத் திருத்திக் கொண்டு விடுதலைப் புலிகளின் சரித்திரம் முடிந்துவிட்டதென்றார்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...