Friday, 21 August 2009

தமிழ்த் திரையுலகைக் கேவலப் படுத்திய சிங்கள அரசு. வாய்மூடியிருக்கும் ஆரிய அரசுஇலங்கை அரசின் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் தென்னிந்தியத் தமிழ்த் திரைப் பட உலகம் விடுதலைப் புலிகளிடமிருந்து பணம் பெறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஏசியன் றிபியுனுக்கு (Asiantribune) வழங்கிய செவ்வியிலேயே இந்தக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.

Did Rajnikanth, Vaiko and Ramdoss benefit from LTTE money? Yes, they did, alleges Sri Lanka Minister for Resettlement and Disaster Relief Services Abdul Risath Bathiyutheen, who also claims that the Tigers funded business ventures and set up Tamil radio and TV stations in the West and Far East.

இப்படி Asiantribune.com இல் செய்திவெளிவந்தது.

இவ்வாறிருக்க ரைம்ஸ் ஒf இந்தியா இப்படிக் கூறுகிறாது:

CHENNAI: A Sri Lankan minister has stirred up a controversy by alleging that the LTTE had funded the production of Tamil movies as part of its international business ventures. Resettlement and disaster relief services minister Abdul Risath Bathiyutheen reportedly said films thus tainted by 'LTTE blood money' included Tamil superstar Rajnikanth's movies.

சிங்கள அரசால் வைக்கப்பட்ட இக்குற்றச் சாட்டு சாதாரணமானதல்ல. விடுதலைப் புலிகள் தடை செய்யப் பட்ட இயக்கம். அதனுடன் பணக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றம். அப்படியான தொடர்பு இருந்தால் அதை ஏன் இந்தியக் காவல்துறையோ உளவுத்துறையோ கண்டு பிடிக்க முடியாமல் போனது? இந்திய மைய அரசு இலங்கையுடன் தான் நல்ல உறவுகளைப் பேணுவதாகவும் அதன் பிராந்திய ஒருமைப் பாட்டையும் மதிப்பதாகவும் இலங்கைக்கு பயங்கர வாத ஒழிப்பில் உதவுவதாகவும் அடிக்கடி பிதற்றிக் கொள்கிறது. அப்படிப்பட்ட நல்ல உறவு பேணப்படும் நாடாகிய இலங்கைக்கு இந்தியாவில் விடுதலைப் புலிக்ளுக்கு பணம் சேர்ப்பதாகத் தெரிந்தால் அதை பற்றி அரச மட்டத்தில் இராச தந்திர மட்டதில் எடுத்துச் சொல்லப் பட்டு நடவடிக்கை எடுக்காமல் இப்படி அறிக்கைகள் விடுவது ஏன்? இது தொடர்பாக இந்திய மைய அரசு ஆட்சேபம் தெரிவிக்குமா? இந்தியக் குடிமக்களுக்கு அல்லது அங்குள்ள அமைப்புக்களுக்கு எதிராக வேறு நாடு குற்றம் முன்வைக்கும் போது இந்தியா என்ன செய்யவேண்டும்? செய்ய வேண்டியதை இந்தியா செய்யுமா?

தமிழர்கள் இந்தியர் இல்லையா?
இந்திய மீனவர்கள் நடுக்கடலில் சுட்டுக் கொல்லப் படுவதற்கு எதுவும் செய்யாத இந்தியா இதற்கு மட்டும் ஏதாவது செய்யுமா? உத்தரப் பிரதேச பேரினவாதிகளின் தமிழ்நாட்டுக் கொத்தடிமைகள் எல்லை தாண்டும் மீனவர்கள் கொல்லப் படுவர் என்று பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் சொல்கின்றனர். ஒருவர் தனது நாட்டு எல்லையை தாண்டி மற்ற நாட்டு எல்லைக்குள் செல்லும் போது சுட்டுக் கொல்லப் படுவதில்லை. அவர் கைது செய்யப் பட்டு நீதிம்னறில் நிறுத்தப் படுவர். அப்படிக் கொல்லப் படுவது இருநாடுகளுக்கும் இடையில் போர் நடந்து கொண்டிருக்கும் போதே இது நடக்கும். மானம் கெட்ட இதிய மைய அரசைப் பொறுத்தவரை தமிழர்கள் இந்தியர் இல்லையா?
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...