Sunday 16 August 2009

சூடு சொரணை இல்லையா? இந்தியா மீண்டும் கோரிக்கை விடுக்கிறது.



இலங்கையில் மும்முரமான இனக்கொலை இந்த ஆண்டின் முற்பாதியில் நடந்து கொண்டிருத்த வேளை இந்தியா போர் நிறுத்தம் உடனடியாக செய்ய வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தது. இலங்கை நிராகரித்து. இந்தியா எதுவும் செய்யவில்லை. தொடர்ந்தும் இலங்கைக்கு பலவிதங்களிலும் உதவுகிறது.

வன்னி வதை முகாம்களில் சட்ட விரோதமாகத் தடுத்து வைக்கப் பட்டிருக்கும் தமிழர்களை ஆறு மாதங்களுக்குள் மீள் குடியேற்றம் செய்யப் படவேண்டும் என்று வலியுறுத்தி கோரிக்கை விட்டது. இலங்கை நிராகரித்து. இந்தியா எதுவும் செய்யவில்லை. தொடர்ந்தும் இலங்கைக்கு பலவிதங்களிலும் உதவுகிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு உடனடி அரசியல் தீர்வு தேவை என்று இந்தியா கோரிக்கை விடுத்தது. இலங்கை அதை அசட்டை செய்யவில்லை. இலங்கை நிராகரித்து. இந்தியா எதுவும் செய்யவில்லை. தொடர்ந்தும் இலங்கைக்கு பலவிதங்களிலும் உதவுகிறது.

இப்போது வன்னி முகாம்களில் இருக்கும் மக்களின் பேரவலத்திற்கு மேலும் அவலம் வன்னியில் பெய்யும் மழையால் ஏற்படுகிறது. இது தொடர்பாக பல அமைப்புக்களும் ஏற்கனவே எச்சரித்திருந்தன. இப்போது உரிய நடவடிக்கை எடுக்கும் படி இந்தியா கோரிக்கை விடுக்கிறது. இதையும் இலங்கை அசட்டை செய்யவில்லை.

இந்தியாவிற்கு சூடு சொரணை இல்லையா?
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு ஏற்பாடு இருக்கிறது போலத் தோன்றுகிறது. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்களை அழித்தொழிக்க இலங்கைக்கு இந்தியா சகல உதவிகளும் இந்தியா வழங்கும். ஆனால் அவ்வப் போது இலங்கைத் தமிழர்களுக்கு சாதகமாக நடப்பது போல் அறிக்கைகள் விடும். அதை இலங்கை அசட்டை செய்யத் தேவையில்லை. அல்லது இந்தியாவிற்கு சூடு சொரணை இல்லையா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...