Friday, 14 August 2009

ஈழத் தமிழர்களுடன் சந்திப்பு: சும்மா ஆடுமா அமெரிக்கக் குடுமிஎண்பதுகளில் பிலிப்பைன்சில் தனது தளங்களின் இருப்புக்கு சாவால்கள் எழுந்தபோதே அமெரிக்கா தன்து அடுத்த இலக்காக இலங்கையத் தேர்ந்தெடுத்தது. அமெரிக்காவின் டியாகோகசியத் தளம் நிலப் பரப்பு அளவில் சிறியது. ஈராக்கிற்கு எதிரான முதற் போர் புரியும் போது அது புலப்பட்டது. எண்பதுகளில் இலங்கையில் எரிபொருள் நிரப்பு வசதியும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான் தொடர்பாடல் வசதியும் அமெரிக்காவிற்கு தேவைப் பட்டது. அதிலிருந்து இலங்கையில் தமிழர்கள் பலிக்கடா ஆக்கப்படுதல் இந்திரா கந்தி அம்மையாரால் ஆரம்பித்து வைக்கப் பட்டது. இன்று தமிழர்கள் பலி கொடுக்கப் பட்டு எல்லாம் பறித்தெடுக்கப் பட்டு நிற்கதியாக நிற்கின்றனர். எண்பதுகளில் சீனா அமைதியாக இலங்கையில் நடப்பவற்றை ஏது மறியாது போலவும் தனக்கு இலங்கையில் நடக்கும் அமெரிக்க இந்திய ஆதிக்கப் போட்டியில் சம்பந்தம் இல்லாதது போலவும் இருந்து கொண்டு தனது பொருளாதார இராணுவ பலத்தைக் கட்டியெழுப்புவதில் அக்கறை காட்டிக் கொண்டிருந்தது. இந்த அமைதியின் பின்னணியில் ஒரு நம்பிக்கை சீனாவிற்கு பலமாக இருந்தது. அதுதான் சிங்கள மக்கள் மத்தியில் இருந்த அமெரிக்க இந்திய எதிர்ப்பு உணர்வு. அமெரிக்காவை சர்வ தேசஅரசியல் ரீதியிலும் இந்தியாவை கலாச்சார சரித்திர பிரந்திய ஆதிக்க எதிர்ப்பு ரீதியிலும் சிங்களவர்கள் பலமாக எதிர்க்கின்றனர். சீனா தனது பொருளாதாரம் வளர்ச்சியடைய இலங்கையில் தனது பிடியை நிதானமாகவும் உறுதியாகவும் இறுக்கிக் கொண்டது.

இலங்கை ஒரு சர்வாதிகார நாடகலாம்
சீன ஆதரவுக் கொள்கையைக் கொண்ட ஒரு சர்வாதிகார நாடாக மாறும் சாத்தியம் இலங்கையில் ஏற்படுகிறது. இலங்கைக்கு இப்போது சர்வதேச ரீதியாகவும் பொருளாதார இராணுவ ரீதியாகவும் சீனாவின் ஆதரவு இருக்கிறது. இதன் வெளிப்பாடே அமெரிக்கா வன்னி முகாம்களில் இருக்கும் மக்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த போது அமெரிக்கவிற்கு செருப்படி கொடுப்பது போல ஹெகேலிய ரம்புக்வேல பதிலளித்தார்.

தமிழர்கள் மீது அமெரிக்க கரிசனை
இலங்கையின் தற்போதைய மனிதாபிமான சூழ்நிலை தொடர்பில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் அமெரிக்க இராஜதந்திர உத்தியோகத்தர்கள் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.
இலங்கையின் மனிதாபிமான நிலைமை மற்றும் அரசியல் மறுசீரமைப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் 16 தமிழ் புலம்பெயர் அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்கரின் பிரதி செயலாளர் ரொபர்ட் ஓ பிளெக் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜேம்ஸ் மூர்ஸ் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இலங்கையில் நிரந்தர சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் நீதி மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்களை ஒன்றிணைத்து நடைமுறைச் சாத்தியப்பாடுடைய ஓர் தீர்வுத்திட்டத்தை வழங்குவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

அதிகாரப் பகிர்வு மற்றும் மனித உரிமை மீறல் போன்றவை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா இலங்கை தொடர்பாக தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. அமெரிக்க அணுகு முறை இந்திராகந்தியினது அணுகுமுறைபோல் சுய நலன் கொண்டதாகத்தான் இருக்கும். ஆனால் நடுக்கடலில் தத்தளிப்பது போல் நிலையில் இருக்கும் தமிழர்களுக்கு இப்போது எதைக் கிடைத்தாலும் பற்றிக் கொள்வர்.

உலகவர்த்தகதின் மூன்றில் இரு பகுதி இந்து சமுத்திரப் பிராந்தியத்தினூடாகவே நடை பெறுகிறது. அப்பிரந்தியத்தில் சீன வல்லாதிக்கத்தை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளாது. இலங்கைக்கு எதிராக ஒரு புதிய திட்டம் அமெரிக்காவிற்கு உண்டு என்பதையே மனித உரிமைக் கழகம் அண்மையில் வெளியிட்ட புகைப் படங்களும் புலப் படுத்துகின்றன. இதுவரைகாலமும் விடுதலைப் புலிகளின் தலைமை தமிழர்களை எந்த ஒரு நாட்டின் பிடிக்குள்ளும் செல்லவிடாமல் தடுத்து வைத்திருந்தனர். அதனால் அவர்கள் நம்பிய இந்தியாவால் துரோகமிழைக்கப் பட்டு தனிமைப் படுத்தப் பட்டனர். இனிதமிழர்கள் ஒரு பலமிக்க நாடு சார்ந்தே தமது சுதந்திர போராட்டத்தை முன்னெடுப்பர்.
Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...