Wednesday 12 August 2009

புலிகளின் சொத்துக்களைத் தேடி மஹிந்த சிங்கப்பூர் ஓடுகிறாரா?


விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு அதன் தலைமை வைத்த கட்டுப் பாடுகளில் முக்கியமானது அவர்கள் மதுபானம் அருந்தக் கூடாதென்பது. அப்படிப்பட்ட இயக்கம் பன்னாட்டு ரீதியில் போதைப் பொருள்களைக் கடத்தி பணம் ஈட்டியது என்ற அபாண்டமான குற்றச் சாட்டு வைக்கப் பட்டதுண்டு. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவர்களுள் தமிழர்களும் உள்ளனர். இவர்களில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களும் இருந்திருக்கலாம். அது மட்டுமல்ல பன்னாட்டு ஆயுத விற்பனையாளர்களுக்கும் போதைப் பொருள் கடத்தல் காரர்களுக்கும் நெருக்கமான தொடர்புகள் உண்டு. ஆயுத விற்பனையாளர்களுக்கும் விடுதலை இயக்கங்களுக்கும் தொடர்பு உண்டு. அதுவே ஒரு சங்கிலித் தொடர்பை போதைப் பொருட் கடத்தல் காரர்களுக்கும் விடுதலை இயக்கங்களூக்கும் ஏற்படுத்தியது.

விடுதலைப் புலிகளின் வருமானம் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் தமிழர்களிடம் இருந்தே பெறப்பட்டது. இவ்வருமானங்களில் ஒரு பகுதியை விடுதலைப் புலிகள் பல நாடுகளிலும் முதலீடு செய்திருந்தனர். அதில் கப்பற் போக்குவரத்துத் துறை முக்கியமானதாகும்.

இப்போது இலங்கை அரசு விடுதலைப் புலிகளின் சொத்துக்களிலும் வருமானங்களிலும் குறிவைத்துள்ளது. அதற்கு சட்ட விரோதமாகக் கடத்தப் பட்ட பத்மநாதனைச் சித்திரவதை செய்து பெறப்பட்ட தகவல்களைப் பாவிக்கிறது.
இது தொடர்பான தகவல்களை பெற்ற மஹிந்த அவசரமாக சிங்கப்பூர் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விடுதலைப் புலிகளின் சொத்தும் வருமானமும் தமிழ்த் தேசியவாதத்திற்கு சொந்தமானது.

குமரன் பத்மநாதன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்குச் சொந்தமான வங்கி கணக்குகளை முடக்கி அந்தப் பணத்தை ஒப்படைக்குமாறு இலங்கை அரசாங்கம் பத்து நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதில் உள்ள சட்டப் பிரச்சனையை இலங்கை அரசு அறியுமா? சொத்துக்களை அவற்றை முடக்க முடியும். கைப்பற்றுவது சிக்கல். கப்பல் நிறுவனங்கள் பதிவு செய்யப் பட்ட கூட்டுருக்களுக்கு (corporate bodies) சொந்தமானவையாக இருக்கும். அவற்றைக் கைப்பற்றுவதும் இலகுவல்ல. விடுதலைப் புலிகளின் வருமானம் என்பது தமிழ்தேசியத்தில் பற்றுக் கொண்ட தமிழர்களால் வழங்கப் படுவது. அவற்றை எவராலும் கைப்பற்றவும் முடியாது. முடக்கவும் முடியாது. உணர்வுள்ள தமிழர்கள் இருக்கும் வரை தமிழர்களின் விடுதலை நாடி அவை செல்லும்.

9 comments:

Anonymous said...

அடப் பாவீங்களா! தமிழன் வியர்வை சிந்து உழைத்த சொத்துக்களடா!!

yalini said...

பகற் கொள்ளை!!!

Anonymous said...

தமிழ்த் தேசியத்திற்கான எமது பங்களிப்பை அழிக்கமுடியாது...

Anonymous said...

சொத்துக்களைக் கைப்பற்றுவதால் தமிழர்களின் சுதந்திர வேட்கையை அழிக்கமுடியாது

Anonymous said...

சும்மா சத்தம் போடக்கூடாது.
அவன் தொட முடியாமல்
பார்த்துக் கொள்ள எல்லாம் செய்தாகி விட்டதா?
உடனே செய்யுங்கள்.
அனைவரும் கவனமாக இருக்க வேண்டும்.
அந்தக் கொலைகாரப் பாவிகள் எல்லா
திருட்டு வேலைகளும் எய்வார்கள்.

Anonymous said...

எம்தலைவர் சாகவில்லை. இன்னும் புலி ஓயவில்லை!

இப்பொழுது நடக்கும் எல்லா நாடகங்களும் தலைவரின் கணக்குப்படி கச்சிதமாக நடந்தேறுகின்றன.

தலைவர் அரசியற் சூழ்நிலைகளால் தந்திரோபாயமாக மறைந்திருந்தே கட்டளைகள் பிறப்பிக்க வேண்டிய நிலை. ஆனாலும் விசுவாசமான புலம்பெயர் புலனாய்வுப்பிரிவுப் போராளிகளால் கச்சித்மாக காரியங்கள் நடாத்தப்படுகின்றன.

தலைவரை இறந்ததாய் அறிவித்து தான் மொத்தப்பணத்தையும் தட்டிக்கொள்ள நினைத்த கே பீ எனும் தமிழினத் துரோகிக்கு தலைவர் தன் வழியில் தக்க பாடம் புகட்டியுள்ளார். எதிரியைக் கொண்டே எதிரியை அழிக்கும் தலைவரின் தனித்துவமான புதிய போரட்ட நெறிமுறை ஆரம்பித்துவிட்டது.

அதனால் கே பீ உருவாக்கிய மாயைக்குள் சிக்கி அந்த துரோகியை தலைவனாக்காதீர்கள் தமிழீழ மக்களே..

தலைவன் வருவான் தக்க தருணத்தில்.. அதுவரை பொறுங்கள். அதிரடியாய் தொடங்கும் ஐந்தாம் கட்ட ஈழப்போர்!!! அது ஓர் உலகப்போர்!!!! தமிழீழம் நாளை நிச்சயம் மலரும்

VanniOnline said...

ஒட்டு மொத்தத்தில் கே.பி நல்ல நாடகம் ஆடுகிறார். கே.பி யை யாரும் கடத்தவில்லை அவர் தானாக சரணடைந்தார். இது தான் உண்மை. இதற்க்கு மூல காரணம் இந்தியா தான், பணத்தை புடுங்கினால் என்ன?. நாங்கள் திரும்ப கொடுப்போம். விடுதலை மூச்சை எந்த ஒரு சக்தியாலும் அளிக்கமுடியாது?.

buruhani said...

முதலில் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள் அப்போதுதான் எதையும் சாதிக்கமுடியும்.

Anonymous said...

lets watch singalan's history www.youtube.com/watch?v=mZEXHCL8WhQ and www.youtube.com/watch?v=GXmdHqV-gwA

இந்த வீடியோ பதிவையும் பாருங்கோ...

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...