Wednesday 15 July 2009

வன்னி முகாம்களில் மாபெரும் இரத்தக் களரி ஏற்படும்!



"இடைத்தங்கல்" முகாம்களை சிறைக்கூடங்கள் போல் பராமரித்தமையே இங்கு வாழும் மக்களின் பெருமளவானோர் மனநோயினால் பீடிக்கப்பட பிரதான காரணமாகும். இவ்வாறு பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என்று ஜே. பி. வி.யின் பிரசார செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். இனவாதிகளான ஜே. பி. வி யினரே இப்படிக் கூறுகின்றனர்.

வன்னி முகாம்களின் உள்ள தழர்கள் தொடர்ச்சியான மானபங்கப் படுத்தலுக்கும் நிரந்தர மன வேதனைக்கும் உட்படுத்தப் படுகிறார்கள். சகல ஊடகங்களும் (ஒரு பார்ப்பன நாயைத்தவிர) இம்முகாம்களின் மோசமான நிலைய பகிரங்கப் படுத்தி வருகின்றன. சில சிங்கள இனவாதிகளே முகாம்களின் மோசமாக தமிழர்கள் நடாத்தப் படுவதாக கூறத் தொடங்கி விட்டனர். இவர்களைத் துரிக கதியில் மீள் குடியேற்றப் படவேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது. இந்தியாவால் இலங்கை மீது எந்த வித அழுத்தங்களும் பிரயோகிக்க முடியாது. இதையே சிவ சங்கர மேனன் மீசையில் மண்படாத பாணியில் தாம் இலங்கை மீது எந்த அழுத்தங்களையும் பிரயோகிக்கப் போவதில்லை என்று கூறி விட்டார்.

தொடரும் 180 நாட்கள் கணக்கு
இலங்கை அதிபர் இன்னும் 180 நாட்களில் இவர்கள் மீள் குடியேற்றப் படுவார்கள் என்று தொடர்ந்து கூறி வருகிறார். தொடர்ந்தும் அவர் இந்த 180 நாள்கள் கணக்கையே சொல்லிக் கொண்டிருப்பார்.மீள் குடியேற்றதிற்கான எந்த முயற்ச்சிகளும் அரசு எடுத்ததாகத் தெரியவில்லை. இதைச் சில ஊடகங்களும் சுட்டிக் காட்டியுள்ளன. இதை மறுதலிப்பதற்காக அண்மையில் முகாமில் இருப்போருக்கு கடன் வழங்கும் திட்டம் அறிவிக்கப் பட்டது.

சர்வதேச சமூகம் மெல்ல மறக்கும்.
ஈரானில் நடந்த தேர்தலை ஒட்டி இடம் பெற்ற வன்முறைகளும் மைக்கேல் ஜக்சனின் மரணமும் இலங்கைச் செய்திகளை ஒரு புறம் தள்ளி விட்டன. வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் செய்து களைத்து விட்டனர். மேற்கு நாடுகள் அவர்களை விட்டுப் பிடிக்கும் தந்திரத்தில் வெற்றி அடைந்து விட்டனரா? தேர்தலுக்கு முன் ஈழம் பெற்றுத்தருவோம் என்று சொன்ன தமிழ் நாட்டுத் தலைவர்கள் இப்போது அடங்கிப் போங்கடா என்கின்றனர்.

முகாம்களில் இருக்கும் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு.
முகாம்களில் இருக்கும் மக்களின் மனக் கொதிப்பை அண்மயில் அங்கு சென்ற இலங்கை அதிபரின் மகனுக்கு செய்த சேறு அபிசேக மூலமாக அறிந்து கொள்ளலாம். இந்தக் கொதிப்பு இனி வரும் காலங்களில் இன்னும் பன் மடங்காகும்.

அதன் வெளிப்பாடாக அங்குள்ள தமிழர்கள் வன்முறையில் ஈடுபடலாம். வெற்றிக்களிப்பின் உச்சக் கட்டத்தில் நிற்கும் சிங்கள் இராணுவம் தனது மிக மோசமான வன் முறையை தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடும். விளைவு பெரும் இரத்தக் களரியாக இருக்கும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...