Thursday, 9 July 2009

இந்தியாவைக் கேவலப் படுத்திய இந்து ராம்


.
.

வவுனியாவில் ஆரிய சிங்களக் கூட்டமைப்பு போரில் வென்றபின் வவுனியாவில் மூன்று இலட்சம் தமிழர்களை வதை முகாம் என்று அழைக்கப் படவேண்டிய இடைத் தங்கல் முகாம்களின் அடைத்து வைத்திருக்கிறது.

வன்னி இடைத்தங்கல் முகாம் நிலைமை பற்றி வவுனியா அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி மகேஸ்வரன் உமாகாந்த் தெரிவித்தது:

சுகாதார சீர்கேட்டால் பல்வேறு தொற்று நோய்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே நூற்றுக்கணக்கானோருக்கு சின்னம்மை நோய் பரவி இருந்தது இதில் பலருக்கு வாந்தி பேதியும் ஏற்பட்டுள்ளது.

இப்போது மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதில் 64 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 34 பேர் உயிர் இழந்தனர். இதில் 24 பேர் இளைஞர்கள்..

மேலும் தகவல்: இலங்கையில் போர் நடந்த பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் 12 ஆயிரத்து 195 தமிழர்கள் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

.

இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தது:

அகதி முகாம்களை பார்வையிட்டபோது அதிர்ச்சியடைந்தேன். காலைக்கடன்களை கழிப்பதற்குக்கூட மக்கள் மணிக்கணக்கில் கியூவில் நிற்கிறார்கள். 5 பேர் மட்டும் இருக்கக்கூடிய கூடாரத்தில் 30க்கும் அதிகம் பேர் உள்ளனர். கூடாரத்தில் எழுந்து நின்றால், இடுப்பு எலும்பே முறிந்துவிடும்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக் கழகம் தெரிவித்தது: Human Rights Watch (HRW) comments: "The government's history of restricting the rights of displaced persons through rigid pass systems and strict restrictions on leaving the camps heightens concerns that they will be confined in camps much longer, possibly for years."

அல் ஜசீரா செய்தி;

வன்கொடுமையும் மனித மீறல் குற்றச்சாட்டும் முகாம்களில் தொடரும் சித்திரவதையும், தொடரும் பெண்கள் மற்றும் இளம் பெண்கள் மீதான வன்புணர்வும் தொடர்ந்து கொண்டிருக்கின்றனஇதனால் ஏராளமான பெண்கள் கற்பமடைந்துள்ளனர் என்று உதவி குழு ஊழியர் குறிப்பிட்டுள்ளார்..

இந்தக் கொடுமைகளை செய்யக் கூடியவர்கள் யார் என்று என்னால் சொல்லமுடியவில்லை, இதுபோன்ற வன்கொடுமைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை முகாம்களில் அதிக அளவில் காணமுடிகிறது. என்றாலும் என்னால் உறுதியாக சொல்லமுடியும் இவையெல்லாம் ராணுவத்தால் தான் நிகழ்த்தப் படுகிறது என்று .,

இவர்கள் எல்லாம் இப்படிக் கூறிய போது சென்னையில் இருந்து வரும் இந்துப் பத்திரிகையின் ஆசிரியர் ராம் அவர்கள் ஜுனியர் விகடனுக்கு அளித்த பேட்டியில் வவுனியாவில் இருக்கும் முகாமைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஜுனியர் விகடனின் கேள்வி: ''வவுனியா முகாம்களில் திறந்தவெளி சிறைச் சாலை மாதிரி - சொல்லப்போனால், மின்சாரம் பாயும் இரும்பு வேலிகளுக்குள்ளே அவர்கள் அடைக்கப்பட்டுக் கிடக்கிறார்கள் என்று செய்திகள் வருகிறதே..?''

சிங்கள ரத்னா இந்து ராமின் பதில்: ''இந்த முகாம்களில் இருக்கும் தமிழர்கள், அந்த இடத்தை விட்டு வெளியேற முடியாது என்பது உண்மை. முகாமைச் சுற்றி வேலி இருப்பதும் உண்மை. அங்கே காவலுக்கு ராணுவம் இருப்பதும் உண்மை. ஆனால், மின்சாரம் பாயும் இரும்பு வேலிகள் என்ப தெல்லாம் வெறும் கற்பனை. இப்படிச் சொல்வதால் அங்கே வேறு பிரச்னைகள் வரவே வாய்ப்பில்லை என்று அர்த்தமில்லை. மழை வந்தால் அங்கே புது பிரச்னைகள் வரலாம். ஆனால், நம்மூரில் இருக்கும் அகதிகள் முகாம்களைவிட அவை பல மடங்கு மேம் பட்டதாக இருக்கிறது என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்!''

வவுனியாவில் உள்ள முகாம்களின் மிக மிக மோசமான நிலை பற்றி மேலுள்ள தகவல்கள் பல தரப்பிலும் இருந்து வெளியாகியபோது இந்தியாவில் உள்ள முகாம்களை விட வவுனியா பன்மடங்கு மேம் பட்டது என்று ஒரு இந்தியப் பத்திரிகையாளர் கூறுகிறார். அப்படி ஒரு கேவலமான முகாம்களை நடத்தும் இந்தியா எவ்வள்வு கேவலமானது என்பதை சிங்கள ரத்னா இந்து ராம் அம்பலப் படுத்திவிட்டார்.

சிங்கள இன வெறியர்களான ஜேவிபி கட்சியினர் கூட வவுனியா முகாம்கள் தொடர்பாகத் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

வவுனியா முகாம்கள் சட்ட விரோதமானாவை

எவரையும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாகத் தடுத்து வைக்க முடியாது. அப்படித் தடுத்து வைப்பதானால் அவர்கள் முதலில் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டு நிதிபதியின் உத்தரவின் பேரிலேயே தடுத்து வைக்க முடியும். இம் முகாம்கள் சட்ட விரோதமானவை என் இன்னர் சிற்றி ஊடகம் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் சபையினரிடம் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...