Thursday 25 June 2009

இலங்கையில் ஆசியாவும் மேற்குலகும் – பலப் பரீட்சையில் ஆசியா வென்றதா?


இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கழகத்தில் நடந்தது கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையிலான பலப்பரீட்சையா? இப் பலப் பரீட்சையில் கிழக்கு வென்று மேற்கு தோற்றதா? சீனாவும் இந்தியாவும் இணைந்தால் மேற்கை வெல்லலாமா? சீனவினது இந்தியாவினதும் வளர்ச்சியின் விளைவா இது? இது தொடர்பான புள்ளி விபரங்களும் தகவல்களும் என்ன?
...
முதலாவது விடயம் ஜப்பான் கிழக்கு நாடுதான் அது மேற்கு நாடுகளுடன் இணைந்து நிற்கிறது. ஜப்பானை இந்த விடயத்தில் மேற்கோடும் சேர்க்கமல் விடலாம் ஆனால் கிழக்கோடு சேர்க்க முடியாது.
...
வருமானம்
உலக சனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்ட கிழக்கு உலக வருமானத்தில் மூன்றில் ஒன்றை மட்டுமே பெறுகிறது.
ஆசியாவின் சராசரித் தனிநபர் வரு மனம் $5,800 இது மேற்குலகைப் பொறுத்தவரை $48,000. எட்டு மடங்குக்கு மேல். ஆசிய நாடுகளின் தற்போதைய பொருளாதார வளர்சியின் படி போய்க் கொண்டிருந்தாற் கூட ஆசியா அமெரிக்கவின் தனி நபர் வருமான நிலையை எட்ட 77 வருடங்கள் எடுக்கும். இந்த நிலையை இந்தியா அடைய 123 வருடங்கள் எடுக்கும். சீனாவிற்கு 47 வருடங்கள் எடுக்கும்.
......
பதுகாப்புச் செலவீனம்
ஆசிய நாடுகளின் மொத்த பாதுகாப்புச் செலவீனம் அமெரிக்கவின் பாதுகாப்புச் செலவீனத்தின் மூன்றில் ஒரு பகுதியிலும் குறைவு! ஆசிய நாடுகளின் பாது காப்புச் செலவீனம் அமெரிக்கவின் செலவீனத்திற்கு நிகராக வர இன்னும் 72 வருடங்கள் எடுக்கும்.
...
மேற்குலக நாடுகள் ஒன்று தனது அயல் நாட்டின் எல்லையில் சண்டை பிடிப்பதற்கான சூழ் நிலையில் இல்லை. இந்தியாவும் சீனாவும், இந்தியாவும் பாக்கிஸ்த்தானும், சீனாவும் தைவானும், வட கொரியாவும் தென் கொரியாவும் எல்லைகளில் மோதல் சூழ் நிலைகள் நிலவுகின்றது.
...
இருந்தும் ஐநாவில் சீனாவும் இந்தியாவும்
அநியாயத்திற்கு வென்றது எப்படி?
பிரித்தானியாவும் பிரான்சும் மட்டுமே இதில் அக்கறை எடுத்தன. மற்ற நாடுகள் குறிப்பாக அமெரிக்கா இதில் பெரிதாக அக்கறை எடுக்கவில்லை. ஆபிரிக்க நாடுகள் இந்தியாவுடனும் சீனாவுடனும் சேர்ந்து வாக்களித்தன.
...
இது எங்க ஏரியா உள்ளே வராதே!
இலங்கையில் மேற்குலகின் பிடியிலும் பார்க்க சீனாவின் பிடி இறுகியது எப்படி? மேற்குலக நாடுகள் இந்திரா காந்தி அம்மையார் பிரதம மந்திரியாக இருந்தபோது இலங்கை இந்தியாவின் வல்லாதிக்கத்திற்கு உட்பட்டது என்பதை ஏற்றுக்கொண்டன. இலங்கைக்கு பயங்கரமான ஆயுத உதவிகளைச் செய்வதை மேற்குலக நாடுகள் தவிர்த்துக் கொண்டன. இதைப் பயன்படுத்தி சீனா இலங்கைக்கு தேவையான ஆயுதங்களை வழங்கி தன் பிடியை இறுக்கிக் கொண்டது. இந்தியா தனது போரை நடாத்தத் தேவையான ஆயுதங்களை வழங்கியது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...