Thursday 18 June 2009

இந்திய முன்னாள் பிரதமரின் துரோகத்தை மறைத்த தினமணி



சிறீமா - சாஸ்திரி ஒப்பந்தம் என்பது, இலங்கையில் நாடற்றவர்களாக இருந்த 975,000 இந்திய வம்சாவளித் தமிழர்களின் எதிர் காலம் தொடர்பாக, அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த சிறீமா பண்டாரநாயக்காவுக்கும், இந்தியப் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரிக்கும் இடையில் 1964 ஆம் ஆண்டில் அக்டோபர் 30 இல் கையெழுத்தான ஒப்பந்தத்தைக் குறிக்கும். இந்த ஒப்பந்தத்தின்படி மேற் குறிப்பிட்டவர்களில் 525,000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்வதெனவும், 300,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்குவதெனவும் முடிவானது. மீதி 150,000 நாடற்றவர்கள் என்ற பரிதாப நிலைக்குத் தள்ளப் பட்டனர்.
.
இதை வன்மையாக எதிர்த்தவர் ஈழத் தமிழர்களின் தலைவர் தந்தை செல்வா அவர்கள். அவர் இதை அதிகார அரசியலுக்காக அரை மில்லியன் மக்களைப் பகடைக் காய்களாகப் பயன்படுத்திக் கொண்டது பன்னாட்டு அரசியலில் முன்னெப்பொழுதும் இல்லாத நடவடிக்கை என விபரித்தார்.
..
ஒருவரை நாடற்றவர் என்று சொல்வது சர்வ தேசச் சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் முரணானது. நட்ட நடுக்கடலில் செல்லும் ஒரு கப்பலில் ஒரு பிள்ளை பிறந்தால் கூட அது அந்தக் கப்பல் எந்த நாட்டிற்கு அடுத்து செல்கிறதோ அந்த நாட்டின் குடியுரிமை அப்பிள்ளைக்கு உண்டு. உலகத்தில் நாடற்றவர் என்று ஒருவர் இருக்கக் கூடாது என்பதே சர்வதேச நியமம். இப்படியிருக்க 150,000 மக்களை நாடற்றவர்களாக கையொப்பமிட்டவர் காங்கிரசுக் கட்சியின் பிரதம மந்திரி சாஸ்திரி அவர்கள். அவர் செய்த இந்த இனத் துரோகம் தமிழர்களின் வரலாற்றில் மறக்கப் படக் கூடாத ஒன்றாகும். இதை தினமணியில் தமிழர்களின் வரலாற்றை எழுதி வரும் பாவை சந்திரன் அவர்கள் மூடி மறைத்துள்ளார்.
.
இன்று இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்களத் தலைவர்களுடன் கைகுலுக்கி அவர்களிடம் எதையோ எல்லாம் பெற்றுக் கொள்கிறார்கள் தமிழக மற்றும் இந்தியத் தலைவர்கள். சிறிமாவோ பண்டாரநாயக்க அம்மையாருடன் அருகில் நின்று புகைப்படம் எடுக்க மறுத்தவர் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர்; இராசகோபாலாச்சாரியார் அவர்கள்.

1 comment:

Raja said...

Really unknown news.
Appreciated for sharing.
Thanks!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...