Wednesday 13 May 2009

சிங்களத்தை சுற்றி வளைக்கும் தமிழர்கள்

இராணுவ ரீதியில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் இந்தியா சிங்களத்திற்கு பக்க பலமாக நின்று செயல்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் விஜய் நம்பியார் செய்த அடாவாடித்தனம், இரசியா பாதுகாப்புச் சபையில் கொடுக்கும் முட்டுக் கட்டை ஆகியன சர்வதேச ரீதியில் இலங்கையின் இனப் படு கொலைக்கு இந்தியா கொடுக்கும் கள்ளத்தனமான ஆதரவிற்கு நல்ல எடுத்துக் காட்டு. இந்த இந்தியாவின் கள்ளத்தனத்தை தகர்தெறிய உலகெங்கும் வாழ் தமிழர்கள் கடும் பிரயத்தனம் செய்து வருகின்றனர். அவர்கள் இரவு பகலாக செய்யும் பல போராட்டங்கள் சில அரசுகளின் கொள்கை வகுப்பாளர்களிடம் மன மாற்றம் எற்படுத்துவது உண்மை. தமிழர் பிரச்சனை பலநாடுகளில்நாடாளாவிய ரீதியில் பிரபல மடைந்து வருகிறது. நான் இலங்கையில் நடக்கும் கொடுமைகளை என்னுடன் வேலை செய்பவர்களுக்கு எடுத்துச் சொல்வதுண்டு. சுமார் 3 மாதங்களிற்கு முன் இதற்காக மிகச் சிரமம் எடுத்துக் கொண்டதுண்டு. இப்போது கலையில் அவர்களாக வந்து இலங்கையில் நேற்று அரச படைகள் மருத்துவ மனையைத் தாக்கியதாம் என்று அவர்களாகவே வந்து எனக்கு செய்தி சொல்லும் அள்விற்கு மாறிவிட்டது. வானொலி தொலைக்காட்சி பத்திரிகைகள் எல்லாவற்றிலும் அவ்வப்போது இல்ங்கைச் செய்திகள் வெளிவருகின்றன. இன்றைய ரைம்ஸ் பத்திரிகை இப்படிக் கூறுகிறது:
Slaughter in Sri Lanka
The world must force Colombo to halt the shelling of trapped civilians.

மேலும் வாசிக்க: http://www.timesonline.co.uk/tol/comment/leading_article/article6276147.ece

இங்கு Slaughter என்பது மிகக் கடுமையான பதம் என்பதைக் கவனிக்கவும்.
.
பிரித்தானியாவின் பாராமுகக் கொள்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் தமிழர்கள் கூறுகின்றனர். பிரான்ஸ் தேசத்தில் வாழும் தமிழர்கள் சர்வதேச ரீதியாக இலங்கை அரசிற்கு எதிராக போர்க் குற்றதிற்கான சட்ட நடவடிக்கை எடுக்க விருக்கின்றனர்.

பிரித்தனிய பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டு முயற்சி, பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சரதும் ஹிலரி கிளிண்டனதும் கூட்டறிக்கை எல்லாம் உலகத் தமிழர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. உலகத்தமிழர்களின் போராட்டங்கள் இப்போதைக்கு ஓய்விற்கு வருவதாகத் தெரியவில்லை.

சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள இஸ்ரெலிய இராச தந்திரி ஒருவர் இலங்கை அரசிடம் தெரிவித்த கருத்து:

"நீங்கள் இங்கு தமிழர்களைச் சுற்றி வளைக்கிறீர்கள், உலகெங்கும் உள்ள தமிழர்கள் உங்களைச் சுற்றி வளைக்கிறார்கள்"

1 comment:

சவுக்கடி said...

உண்மைதான்!

தொய்வின்றித் தொடர வேண்டும்!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...