Monday 18 May 2009

இலங்கை - அமெரிக்காவின் பங்கு எங்கே?


மஹாபல்லி அரசனின் யாகத்தை குழப்ப திருமால் வாமன அவதாரம் எடுத்து ஒரு சதி செய்தாராம். மஹாபல்லி யாகம் செய்த முடிவில் எல்லோருக்கும் தானம் கொடுத்து முடிந்த நிலையில் ஒரு சிறு ரிஷிபோல் திருமால் வாமனன் அவதாரம் எடுத்து வந்தார். அவருக்குக் கொடுக்க மஹாபல்லியிடம் எதுவுமில்லை. வாமனனும் தாயாள மனம் படைத்தவன் போல் தனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் மூன்றடி மண் மட்டும் போதுமென்றார். மஹாபல்லி மனம் மகிழ்ந்து எடுத்துக் கொள்ளும்படி சொன்னான். வாமனனும் தனது இரண்டு அடியால் மூன்று உலகையும் அளந்து விட்டு மூன்றாவது அடி எங்கே என்று கேட்க மஹாபல்லி தன் தலை மேல் வைக்கும் படி வேண்டினான். வாமனன் தனது காலை மஹாபல்லி மேல் வைத்து அவனைக் கொன்றார்.
.
இலங்கையில் அம்பாந்தோட்டையில் சீனாவிற்கு கொடுத்தாயிற்று. திருமலையை இந்தியாவிற்கு கொடுத்தாயிற்று. கண்ணிவெடி அகற்றுவதென்ற போர்வையில் மேலும் இந்தியப் படை வரவிருக்கிறது. அப்போ அமெரிக்காவின் பங்கு எங்கே? கடைசியில் வாமனன் வந்த மாதிரி அமெரிக்கா வருமா? மூன்றாம் அடி யார் தலையில்?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...