Friday 1 May 2009

மூன்று சகோதரர்க்ளும் ஒரு சனியாளும் போர் வெறியில்


இலங்கையை ஆட்டிப் படைக்கும் மூன்று சகோதரர்களும் தங்கள் அயல் நாட்டுச் சனியாளுடன் கூடி போர் வெறி பிடித்து அலைகின்றனர்.
தமிழ்நாடு சட்டசபை போர் நிறுத்தம் வேண்டி இரு தீர்மானங்கள் நிறைவேற்றியது நால் வரும் செவி சாய்க்கவில்லை.
விடுதலிப் புலிகள் ஒருதலைப் பட்சமான போர் நிறுத்தம் அறிவித்தனர். அது எள்ளி நகையாடப் பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை மூன்று முறை போர் நிறுத்தம் செய்யும்படி கேட்டது. மறுக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபை அப்பாவிப் பொது மக்களைப் பாதுகாக்க ஒரு வாரத்துக்கு போரை ஒத்திவைக்கும்படி கேட்டது. மறுக்கப் பட்டது.
பாதிக்கப் பட்ட மக்களுக்கு உதவ சர்வ தேச தொண்டு நிறுவனங்களுக்கு அனுமது அளிக்கும் படி ஐ.நா விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப் பட்டது.
நாட்டில் நடக்கும் உண்மை நிலையை அறிய நடுநிலைப் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டது.
இலங்கப் பிரச்சனையைப் பற்றி நன்கு அறிந்த சுவீடனின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இலங்கைக்குள் நுழைய அனுமதி மறுக்கப் பட்டது.
போர் நிறுத்தம் வேண்டி அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த கோரிக்கைகள் நிராகரிக்கப் பட்டது.
பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் அவர்களுடன் கடுமையான வாய்த்தர்கத்தில் கோத்தபாய ஈடுப்ட்டார். அதி வேண்டுமென்றே தன் வீரத்தை வெளிப்படுத்து முகமாக பகிரங்கப் படுத்தினார்.
ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு வலயம் என்று ஒன்று இலங்கையில் இல்லை என்று கூறியுள்ளார்.
ஐநாவின் ஒருமித்த குரல் வேண்டுமென்கிறார் - ஜோன் ஹொல்ம்ஸ் அவர்கள்.
இலங்கை விவகாரம் தொடர்பாக பாதுகாப்புச் சபை உறுப்பினர் ஒரு மித்து குரல் கொடுக்க வேண்டுமென்கிறார் ஐநாவின் மனிதாபிமானங்களுக்கான உயர் அதிகாரியான ஜோன் ஹொல்ம்ஸ் அவர்கள். இலங்கை சென்று திரும்பிய பின் மூடிய அறைக்குள் அவர் நடத்திய கூட்டத்தில் அவர் இதைக் கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது. இலங்கை தொடர்பான விடயங்களை ஐநா பகிரங்கமாக அறிவிக்காமல் இரகசியமாக வைத்திருந்து பின் கசிய விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. போரில் இறந்த அப்பாவிப் பொதுமக்கள் தொகை, போருக்குள் சிக்கியுள்ள மக்கள் தொகை, போரினால் எற்பட்டுள்ள அழிவுகள் போன்ற தகவல்களை பகிரங்கமாக அறிவிக்காமல் பின் கதவால் கசியவிடும் பணியை ஐநா செய்கிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...