Thursday 2 April 2009

சனநாயக வழியில் ஈழப் பிரச்சனைக்குத் தீர்வு - ஏமாற்றும் முயற்ச்சியா? அறிவின்மையா?



ஜனநாயக ரீதியில் இலங்கை தமிழ் மக்கள் வாக்களித்து தமிழீழம் மலர்ந்தால் என்னைவிட அதிக மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. இதனை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகவே நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.
மேற்படி கருத்தை மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் திரு மு. கருணாநிதி அவர்கள் அண்மையில் கூறினார். இது போன்ற ஒரு கருத்தை முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலித ஜெயராமும் இதற்கு முன்னர் முன் வைத்தார். இவர்கள் ஈழத்தமிழர்கள் சம்பந்தமாகக் அக்கறை காட்டினால் தமிழர்கள் எல்லோரும் மகிழ்வர். இக்கருத்துக்கள் தேர்தல் அறிவித்தவுடன் வந்த்தால் இக்கருத்துக்கள் உண்மையான இதய சுத்தியுடன் முன் இவைக்கப்பட்டதா என்ற கேள்வி எழுவது இயல்பு.
1977-ம் ஆண்டில் ஈழத் தமிழர்கள் தனி ஈழம் தான் ஒரே தீர்வு என சனநாயக முறைப்படி கூறிவிட்டனர். அப்படிக் கூறியமைக்காக சிங்களப் பேரினவாதிகள் அவர்கள் மீது மோசமான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். அதற்க்கு முன்பும் பல முறை சனநாயக ரீதியில் தமது பிரச்சினைய வெளிப் படுத்திய போதும் தமிழர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.
1980களில் ஆயுத போராட்டதின் மூலமாகத்தான் உரிமை பெறமுடியும் என் முனைந்தபோது மாபெரும் இனக் கலவரத்தை நன்கு திட்டமிட்டு அரச படையினரும் இணைந்து அரங்கேற்றினர்.
The following statement appeared in The Financial Times is a testament to this.
“The violence was vicious and bloody. In street after street in Colombo groups of rioters hit only at shops and factories, as well as homes owned by Tamils. Troops and police (almost exclusively Sinhalese) either joined the rioters or stood idly by. The events were so well organized no one doubts that there was a master list of targets.” – Financial Times, 12 August 1983.
இந்த இனக்கலவரத்தை மறைந்த இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் ஒரு இனப் படுகொலை என்றே கூறினார்.
இந்நிலையில் ஈழப் பிரச்சினை சனநாயக முறைப்படி தீர்க்கலாம் எனக் கூறுபவர்கள் பின் வருபவற்றை அறியாதவர்கள்:
1. இலங்கையின் அரசியலமைப்பு.
2. இலங்கையின் இனப் பிரச்சனையின் வரலாறு.
3. சிங்கள மக்களின் மனோபாவம்
4. சிங்கள அரசியல் கட்சிகள் தமிழர் பிரச்சினையை அணுகும் விதம்.
ஆனாலும் இவ்விரு அரசியல்வாதிகளும் இப்படிக் கூறுவது ஏன்?
தமிழ்நாடு உத்தரப் பிரதேசப் பேரின வாதிகளின் அதிகாரப் பிடிக்குள்தான் இருக்கிறது. இவர்கள் இருவருக்கும் தெரியும் ஆயுத பேராட்டத்தின் மூலம் தான் ஈழப்பிரச்சினை தீர்க்க முடியுமென்று. ஆனால் இவர்களால் ஒரு தடியைத்தன்னும் தூக்கி ஈழத்தமிழ்ர்களுக்கு கொடுக்க முடியாது இதனால் சிங்களவனை அடி என்று. அந்த அளவிற்கு அதிகாரமற்ற நிலையில்தான் தமிழ்நாடு இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு அப்படி.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...