Friday 10 April 2009

ஈழப்பிரச்சனை – மீண்டுமொரு அரை வேக்காட்டுத் தீர்வுக்கு இந்தியா முனைப்பு.




பார்ப்பனியக் கொலைவெறியனை சந்திக்க ஈழப் பாரளமன்ற உறுப்பினர்கள் மறுப்பு.
ஈழத் தமிழினத்தை வேரோடறுக்கும் போருக்கு முக்கிய காரண கர்த்தாவான சிவ் சங்கர் மேனனைச் சந்திக்க மறுப்புத் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் 15,16ஆம் நாட்களில் சிவ் சங்கர் மேனனுடன் சந்திப்பு ஒன்றிற்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரளமன்ற உறுப்பினர்களுக்கு விடுத்த அழைப்பை அவர்கள் நிராகரித்துள்ளனர். இலங்கையில் போர் நிறுத்தும் ஏற்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் இந்தியா எடுக்காதது தான் மறுத்ததற்கான காரணம் என்று கூறப்படுகிறது.


சென்ற ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரளமன்ற உறுப்பினர்கள் பாரிய போரை இந்தியாவும் இலங்கையும் திட்டமிட்டுக் கொண்டிருந்த வேளை டெல்லிக்கு சென்று இந்தியப் பிரதம மந்திரியைச் சந்திக்க பல நாட்கள் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர். தமிழ்ப்பாராள மன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிரதம மந்திரியை சந்திப்பதற்கு முட்டுக் கட்டை போட்டவர் இந்த மேனன். ஆரிய-சிங்களக் கூட்டமைப்பு ஈழத்தில் இனப்படு கொலையின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் வேளையில் விடுக்கப்பட்ட இந்த அழைப்பு தமிழ்நாட்டு மக்களுக்கு தேர்தல் நேரத்தில் தமிழர்மீது தமக்கு அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் நோக்கம் கொண்டதாகவே கருதப்பட வேண்டும் என்று தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் கருதுகின்றனர். அல்லது பிரித்தாளும் கொள்கையை செயல்படுத்தும் நோக்கம் கொண்டிருக்க வேண்டும்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாரளமன்ற உறுப்பினர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளே ஈழத்தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகள் என்றும் தமழீழமே தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு என்ற கொள்கையை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றியீட்டியவர்கள். இந்தியா இவ்விரண்டு கொள்கைகளையும் முற்றாக மறுக்கும் நாடு.


தமிழர் மீது அக்கறையில்லா சோனியா-மேனன் அதிகார மையம்.
நெடுமாறன் ஐயா அவர்கள் சேகரித்த மருந்துப் பொருட்களை தமிழ் மக்களுக்குச் சேகரித்த மருந்துப் பொருட்களை அனுப்புவதற்கு மறுத்த சோனிய-மேனன் அதிகார மையம் தமிழர் நலனில் எவ்வித அக்கறையும் இல்லாதது என்பதே உண்மை.


தேர்தலுக்காக மீணடுமொரு அரை வேக்காட்டுத் தீர்வு
ராஜுவ் காந்தி முன்பு செய்தது போல் ஒரு அரை வேக்காட்டுத் தீர்வை இந்தியத் தேர்தலுக்கு முன் அவசரமாக காகிதத்திலாவது சமர்ப்பித்து தமிழ்நாட்டுத் தமிழர்களைத் தேர்தலுக்கு முன் ஏமாற்றியே ஆக வேண்டிய நிர்ப்பந்த நிலை காங்கிரசிற்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் ராஜபக்சே சகோதரர்கள் புலிகளை அழித்தொழிக்க முன் எந்தத் தீர்வையும் முன்வைக்க மாட்டோம் என இந்தியாவின் முகத்தில் அறைந்தாற் போல் சொல்லி விட்டார்கள். விடுதலைப் புலிகளை ஒழித்தபின் இந்தியாவின் சொற்படி நடக்க வேண்டிய நிர்ப்பந்தம் ராஜபக்சே சகோதரர்களுக்கு இருக்காது.

1 comment:

Anonymous said...

http://ponnilajudy.blogspot.com/2009/04/blog-post_09.html

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...