Thursday 30 April 2009

தடுப்பு முகாம்களில் தமிழ் இளைஞர்கள் கொலை.



இலங்கைத் தமிழ் இளைஞர்கள் இலங்கையின் பல வேறு பகுதிகளிலும் உள்ள தடுப்பு முகாம்களில் கொலை செய்யப் படுகின்றனர் என நம்பப் படுகிறது. கடந்த சில தினங்களில் இத்தடுப்பு முகாம்களில் இருந்து பல இளைஞர்கள் கொலைக்குப் பயந்து தப்பி ஒடியுள்ளனர். போர் நடக்கும் பகுதியில் இருந்து வெளியோறுவோரில் இளஞர்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு தனியான வதை முகாம்களில் வைககப் படுகின்றனர். இவர்கள் எங்கு வைக்கப் பட்டுள்ளனர் என்றவிபரம் யாருக்கும் வெளியிடப் படுவதில்லை. இளம் பெண்கள் படையினரின் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அமெரிக்கா இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடனை தாமதிக்கச் செய்கிறது. இந்தியா என்ன செய்யப் போகிறது?
தனது போர் நிறுத்தக் கோரிக்கையை உதாசீனம் செய்ததால் மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி அமெரிக்கா இலங்கைகான சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை தாமதிக்கும் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவும் தான் இலங்கையில் போர் நிறுத்தம் கோருவதாக அறிவித்தது. தமிழ்நாடு சட்ட சபையில் தீர்மானங்களும் நிறைவேற்றப் பட்டன. இலங்கை கேட்கவில்லை. தனது கோரிக்கைக்கு செவி மடுக்காத இலங்கைக்கு எதிராக இந்தியா என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது. இந்தியாவின் போர் நிறுத்தக் கோரிக்கை வெறும் பாசாங்கா?
முதல்வர் கலைஞரின் உண்ணா விரத நாடகத்தின் பின் 600இற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் இலங்கையில் கொலை.
முதல்வர் கருணாநிதி அவர்கள் உண்ணா விரதம் செய்தபின் இலங்கை போரை நிறுத்தி விட்டதாக தமிழகத்தில் வெடி கொழுத்தப் பட்டது. பத்திரிகைகள் தொலைக்காட்சிகள் சில கலைஞரைப் புகழ்ந்து தள்ளின. ஆனால் போர் நிறுத்தம் என்பது கிடையவே கிடையாது என இலங்கை அரசு அறிவித்தது. கனரக ஆயுதங்கள் பாவிக்கப்படமாட்டாது என்று சும்மா சாக்குக்கு சொல்லிவிட்டு தொடர்ந்தும் அவற்றைப் பாவித்து அப்பாவிகளை கொன்று குவிக்கிறது.
பிரபா எங்கே?
பிரபாகரனைப் பிடிக்கும் வரை போர் தொடர்ந்து நடக்கும் என இலங்கை குடியரசுத் தலைவரின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார். ஆனால் பிரபாகரன் எங்கே என்ற கேள்விக்கு இப்பேது விடை காண யாராலும் முடியாதுள்ளது. யாருக்கும் தெரியாத இடத்தில் அவர் இருக்கிறார். புதிய வடிவ போர் உத்தியுடன் வருவார் என்பது மட்டும் நிச்சயம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...