Wednesday 22 April 2009

இலங்கை - ஐநாமீது நற்பணி நிறுவனங்கள் பலத்த குற்றச்சாட்டு


ஐநாவின் மெளனமே கடலோர இரத்தக் களரிக்கு இட்டுச் சென்றது

பத்திரிகையாளர்களையும் அரச சார்பற்ற நற்பணி நிறுவனங்களையும் போர் நடக்கும் இடத்துக்கு அனுமதிக்காததே இலங்கையில் தமிழர்களின் கடலோர இரத்தக் களரிக்கு இட்டுச் சென்றன என்று அரச சார்பற்ற நற்பணி நிறுவனங்கள் பலவும் ஐக்கிய நாடுகள் சபையில் குற்றஞ் சாட்டியுள்ளன. Joseph Cornelius Donnelly of CARITAS International ஐநாவின் மெளனமே இந்த அனுமதி மறுப்புக்கு காரணமானது என்று கூறினார்.

அமெரிக்காவின் பயங்கர வாத(?) தடை சட்டம்
Operation USA இன் நிம்மி கெளரிநாதன் அமெரிக்காவின் பயங்கரவாத தடுப்புச் சட்டமே தமது வட-கிழக்கு இலங்கையில் தமது பணிகளைப் பிரச்சினைக்குள்ளாக்கியது என்று கூறினார். இது தொடர்பாக கதைக்காமல் தாம் தடை செய்யப் பட்டோம் என்றும் கூறினார்.

ஐநாவின் சிறந்த நோக்கங்கள் காண்பிக்கப் படவில்லை
முன்னாள் ஐநா அதிபர் கோபி அனனின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் ஜேம்ஸ் ரொவுப் அவர்கள்(James Traub, policy director of the Global Center for the Responsibility to Protect) ஐநா தனது சிறந்த நோக்கங்களை இலங்கை விடயத்தில் காண்பிக்கத் தவறியது என்று குற்றம் சாட்டினார்.

இலங்கைக்கு பயந்த ஐநா
Robert Templer of the International Crisis Group, ஐநா இலங்கைக்கு பயந்து நடந்து கொண்டது என்றும் அதனால் பயங்கர விளைவுகள் ஏற்பட்டன என்று குற்றம் சாட்டினார். அரச நடவடிக்கைகளால் இறந்தவரகளின் எண்ணிக்கை தெரிந்தும் ஐநா வெளியிடாமல் இருந்ததையும் அவர்கள் குற்றம் சாட்டினர். தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு தாம் செல்லத் தடை விதித்ததையும் அவர்கள் கண்டித்தனர்.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அனா நெய்ஸ்டற் அவர்கள் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டார்: ஒரு சிறிய நாடான இலங்கைக்கு ஏன் பயந்து நடந்தது? அவரது மறு கேள்வி இலங்கை எப்படி அரசு சார்பற்ற நற்பணி நிறுவனங்களை வெளியேற்ற முடியும்? அவரது கேள்விகளுக்கு விடை வழங்கப் படவில்லை. அத்துடன் அவர் நிற்கவில்லை தமிழர் தடுப்பு முகாம்களுக்கு நிதி வழங்குவது சட்ட பூர்வமானதா என்றும் கேள்வி எழுப்பினார்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...