Sunday 12 April 2009

இலண்டனில் - வரலாறு படைத்த தமிழர் பேரணி







கின்னஸ் சாதனை
இலண்டன் நகர் என்றுமே காணாத வரலாறு படைத்த பேரணியை அங்குள்ள தமிழ் அமைப்பினர் நடாத்தி முடித்துள்ளனர். வந்த மக்கள் தொகை தொடர்பாக் மூன்று விதமான கணிப்புக்கள் வெளிவந்துள்ளன. சிலர் ஒன்றரை இலட்சம் என்றும் சிலர் இரண்டு இலட்சம் என்றும் சிலர் இரண்டரை இலட்சம் என்றும் கூறியுள்னளர். இப்பேரணி கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டியது என்றும் கூறப்படுகிறது.
திணறிய இலண்டன்
மக்கள் இலண்டனை நோக்கி நாட்டின் பல பாகங்களிலுமிருந்து சென்றதால் இலண்டனின் போக்கு வரத்து அமைப்புக்கள் நிலமையை சமாளிக்க முடியாமல் திணறின.

ஐந்து அம்சக் கோரிக்கை
இப் பேரணி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது:
1. உடனடியானதும் நிரந்தரமானதுமான போர் நிறுத்தம்.
2. தடுப்பு முகாம்களில் உள்ள தமிழர்களை உடன் விடுவிக்க வேண்டும்.
3. ஐக்கிய நாட்டு அமைதிப்படை இலங்கை சென்று தமிழர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
4. இந்திய அரசு தனது படைகளை இலங்கையிலிருந்து வெளியேற்ற வேண்டும்.
5. சர்வ தேச நாணய நிதியம் இலங்கைக்கு கடனுதவி வழங்கக் கூடாது.
கட்டுக் கோப்பான பேரணி.
இலட்சக் கணக்கில் மக்கள் கலந்து கொண்ட போதும் இப் பேரணியில் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் மக்கள் மிகக் கட்டுக் கோப்புடன் நடந்துகொண்டனர்.
மாணவர்கள் முன்னின்று செயல்பட்டனர்.
இப்பேரணியின் பெரு வெற்றிக்கு பிரித்தானியப் பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் பெரும் பங்காற்றினர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...