Friday 10 April 2009

கனடாவிற்கான இலங்கைத் துாதர் முகத்தில் கரிபூசல்.


கனாடா ஒட்டாவாவில் தமிழர்கள் நடாத்தும் சாலை மறியல் போராட்டம் பொது மக்களுக்கு இடையூறானதென்றும் தடைசெய்யப் பட்ட இயக்கத்தின் கொடிகளைத் தாங்கி நடப்பதாகவும் கனடாவிற்கான இலங்கைத் துாதர் தயா பெரேரா நீலிக்கண்ணிர் வடித்து செய்த முறைப்பாட்டிற்கு கனடிய வெளி விவகார அமைச்சர் கனன் லோரன்ஸ் சூடாகப் பதிலளித்துள்ளார். ஆர்ப்பாட்டங்களுக்கு தடை செய்வதென்பது என்னைப் பொறுத்த விடயம். எமது நாடு ஒரு சுதந்திர நாடு மக்களுக்கு தமது கருத்துக்களைத் தெரிவிக்கும் உள்ள உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை உண்டு என்று கூறியுள்ளார். இலங்கையில் நடக்கும் போரால் நாம் மிகுந்த கவலையடைந்துள்ளோம். அங்கு உடனடி போர்நிறுத்தம் ஏற்படுவதை வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்த வெளி விவகார அமைச்சர் கனன் லோரன்ஸ் மேலும் தெரிவிக்கையில் போர்ப்பிரதேசத்தில் உள்ள மக்களின் பாதுகாப்புத் தொடர்பாக தாம் கரிசனை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஐநாவின் உடனடித் தலையீட்டைக் கனடா விரும்புகிறது
கனடிய வெளி விவகார அமைச்சர் கனன் லோரன்ஸ் இலங்கை நிலமைகளை தாம் உன்னிப்பாக அவதானிப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை இதில் துரிதமாகத் தலையிட வேண்டும் என்பதைத்தாம் விரும்புவதாகவும் தெரிவித்ததுடன் இதற்கொத்த கருத்துக்களுடைய நாடுகளுடன் தாம் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் ஒத்துழைப் பதாகவும் கூறினார்.



No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...