Tuesday 7 April 2009

இலண்டனில் தொடர் சாலை மறியல் போராட்டம்






















இலங்கையில் நடக்கும் யுத்தத்தை நிறுத்தக்கோரி இலண்டனில் 5000இற்குமேற்பட்ட மக்கள் வரலாறு காணாத சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறுவர்கள் முதல் பெரியோர் வரை இப் போராட்டத்தில் பங்குபற்றுகின்றனர். இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்படும் வரை இப் போராட்டம் தொடருமென்று அவர்கள் தெரிவித்துள்ளனர். பயங்கர இரசாயனக் குண்டுகளை வீசி அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்றதைத் தொடர்ந்து கொதிப்படைந்த மக்கள் தெருக்ளில் இறங்கினர். வெஸ்ற் மின்ஸ்டர் பாலமும் தெருவும் இச்சாலை மறியல் போராட்டத்தால் மூடப்பட்டது. பல்லாயிரக் கணக்கான மக்கள் அவ்விடம் நோக்கி விரைந்ததால் பலத்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சன நெரிசல் காரணமாக தொடரூந்து நிலையம் மூடப்பட்டது. அங்கு பெருமளவில் வந்த காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் அவர்களுக்கு எதிராக எடுக்கவில்லை.
வரலாறு காணாத நிகழ்வு
இப்படி இரவு முழுவதும் இலண்டன் நகரில் சாலை மறியல் போராட்டம் நடப்பது இதுதான் முதல் தடவை. திங்கட் கிழமை மதியம் தொடங்கிய போராட்டம் நள்ளிரவைத் தாண்டியும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் யுத்த நிறுத்தம் ஏற்படும் வரை தாம் அங்கிருந்து விலகப் போவதில்லை என்று அங்கு கூடியிருந்த மக்கள் அறிவித்துள்ளனர்.
தற்கொலை மிரட்டல்
உடன் நடவடிக்கை எடுக்காவிட்டால் அத்தனை பேரும் தேம்ஸ் நதியில் குதித்து தற்கொலை செய்யப் போவதாக அறிவித்ததாக தெரிவிக்கப் பட்டுள்ளது. ஒரு இளைஞர் அவ்வாறு குதித்தார. காவல் துறையினர் அவரை மீட்டெடுத்தனர். இதைத் தொடர்ந்து காவல் துறையினர் படகுகள் மூலம் தேம்ஸ் நதியில் காவலில் ஈடுபட்டனர்.
ஐரோப்பா எங்கும் இருந்து தமிழர்கள் இலண்டன் நோக்கி விரைவு.
இப்போராட்டத்தில் கலந்து கொள்ள ஐரோப்பாவின் பல பகுதிகளிலுமிருந்து தமிழர்கள் இலண்டன் நோக்கி விரைந்து வருகின்றனர்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...