Thursday 19 March 2009

புதுக்கதை விடும் இலங்கை இராணுவம்.



இலங்கை இராணுவம் தனது ஒரு படையணியில் 400 முதல் 500 வரையிலான பேர்களைக் கொண்டது. இப்படையணிகளை 15 பேர்கள் மட்டும் கொண்ட விடுதலைப் புலிகள் இனக்கொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றுவதற்காக போராடுகிறார்கள். இவர்களின் வீரம் செறிந்த தாக்குதலால் இனக்கொலையாளிகளுக்கு பலத்த இழப்புக்களை ஏற்படுத்துகின்றனர். இறக்கும் இராணுவத்தினரை அவர்களின் குடும்பத்தினருக்கு தெரியாமல் புதைத்துவிட்டு அவர்களின் இறப்புக்களை இலங்கை அரசு மூடி மறைப்பதாகச் சொல்லப் படுகிறது. இறப்புக்கள் தொடர்பான சரியான தகவல்கள் அதிபர் ராஜபக்சேக்கும் மறைக்கப்படுவதாக நம்பப்படுகிறது. அண்மையில் பக்சே களமுனையில் உள்ள இடை நிலை அதிகாரிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு இராணுவ இழப்புக்கள் தொடர்பாக விசாரித்தாராம். இவ்விழப்புக்களால் தமது வீரத்தின் மேல் சந்தேகம் வராமல் இருக்க இலங்கை இராணுவம் இப்போது ஒரு புதுக் கதையை கட்டிவிட்டுள்ளது. அதாவது விடுதலைப்புலிகள் தமக்குத் தெரியாது ஒரு புதுவகையான ஆயுதங்களைப் பாவிக்கிறார்களாம். அதனால்தான் தங்கள் தரப்பில் இழப்பு அதிகமாம்.

அவங்க எத்தனை பொய் சொன்னாலும் நம்புறீங்களே நீங்க ரெம்ப ரெம்ப நல்லவங்க!

1 comment:

Anonymous said...

//இறப்புக்களை இலங்கை அரசு மூடி மறைப்பதாகச் சொல்லப் படுகிறது. இறப்புக்கள் தொடர்பான சரியான தகவல்கள் அதிபர் ராஜபக்சேக்கும் மறைக்கப்படுவதாக நம்பப்படுகிறது. //

இன்னும் எவ்வளவு நாள் மறைக்க முடியும் .... விரைவில் வெளிவரும் .. பிறகு தான் தெரியும்

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...