Tuesday 31 March 2009

உலகத் தமிழர்கள் இலங்கை மீது பொருளாதாரப் போர் தொடுக்க உகந்த தருணம் இது.








இலங்கையின் பொருளாதாரம் இப்போது பலபிரச்சனைகளை எதிர் நோக்குகிறது:
1. மோசமான பொருளாதார நிர்வாகமும் அதிகரித்த யுத்த செலவீனமும் இலங்கையின் அந்நியச் செலவாணியைக் காலி செய்துவிட்டது.

2. இலங்கையின் தேயிலை ஏற்றுமதி பாரிய வீழ்ச்சியை எதிர் நேக்கியுள்ளது

3. இலங்கையின் ஆடை உற்பத்தித்தொழிலுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் உற்பத்தி உத்தரவுகள் பெரிய அளவில் குறைந்துள்ளன.

4. இலங்கையின் உல்லாசப் பிரயாணத்துறை உள்நாட்டு யுத்தத்தாலும் சர்வதேசப் பொருளாதார நெருக்கடியாலும் பாதிப்படைந்துள்ளது.
5. இலங்கைக்கு கடன் வழங்க வெளிநாட்டு தனியார் வங்கிகள் பின் நிற்பதுடன் அதிக வட்டி விதிக்கின்றன.

இலங்கையின் பொருளாதாரத்தை தாங்கிப் பிடிப்பதில் உலகெங்கும் வாழ் தமிழர்கள் தம்மை அறியாமலே இரு வகையில் பங்களிக்கின்றனர்:

1. இலங்கைப் பொருட்களை வாங்குதல்
2. இலன்கையில் முதலீடு செய்தல்

3. இலங்கையில் வாழும் தமது உறவுகளுக்கு பணம் அனுப்புதல்.

இதில் முதல் இரண்டையும் உலகெங்கும் வாழ் தமிழர்கள் அறவே செய்யக் கூடது.

தமது உறவுகளுக்கு அத்தியாவசியமான வேளைகளில் மட்டும் பணம் அனுப்ப வேண்டும். இதன் மூலம் ஏறக்குறைய 150 மில்லியன் டொலர் அந்நியச் செலவாணி இழப்பை இலங்கைக்கு ஏற்படுத்த முடியும். இதற்கான தக்க தருணம் இது.

எமது பணத்தில் வாங்கும் குண்டுகள் எமது உறவுகளைக் கொல்வதா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...