Tuesday 3 March 2009

அரசியல் காரணங்களுக்காக துடுப்பாட்ட வீரர்களை பலிக்கடாவாக்கிய இலங்கை? நிதி நெருக்கடியில் பாக் துடுப்பாட்டச்சபை!

இந்தியா அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் பாக்கிஸ்தான் பாதுகாப்பற்ற நாடு என்று ஒதுக்கிய நிலையில் இலங்கை தனது அரசியல் காரணங்களுக்காக தனது துடுப்பாட்ட வீரர்களை பாக்கிஸ்தானுக்கு அனுப்பியதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மும்பைத் தாக்குதலை அடுத்து இந்தியா தனது துடுப்பாட்ட வீரர்களை அனுப்ப மறுத்ததால் பாக் துடுப்பாட்ட சபைக்கு 20மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்படவிருந்தது. பாதுகாப்பு நிலை பாக்கிஸ்த்தானில் உகந்ததாக இல்லை என்று அவுஸ்திரேலியாஅணி பாக்கி்த்தான் செல்ல மறுத்திருந்தது. இதே நிலைப்பாட்டை நியூசிலாந்து அணியும் எடுத்திருந்தது. இது பாக் துடுப்பாட்ட சபைக்கு பலத்த நெருக்கடியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இலங்கை இந்தியாவின் திரை மறைவு வேண்டுலை நிராகரித்து தனது வீரர்களை பாக்கிஸ்த்தானுக்கு அனுப்பியது.
பாக்கிஸ்த்தானுக்கு இலங்கை தனது துடுப்பாட்டக்காரர்களை அனுப்பியதன் நோக்கம் அரசியல் சார்ந்ததாகவே கருதப் படுகிறது. இலங்கை எப்போதும் பாக்கிஸ்த்தானுடன் நெருக்கமான உறவைப் பேணி வருவதன் நோக்கம் இந்தியாவின் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவது மட்டுமல்ல இந்தியாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளதும் என்பதாகும். பாக்கிஸ்தானுடனான அரசியல் உறவை மேம்படுத்துதற்காகவே இலங்கை தனது அணியை அனுப்பியதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வங்குரோத்து நிலையில் பாக் துடுப்பாட்டச்சபை
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தால் கைவிடப்பட்ட போட்டிகளைத் தொடர்ந்து பாக்கிஸ்த்தான் துடுப்பாபட்டச் சபைக்கு பலத்த பண இழப்பு ஏற்படவுள்ளது.
ஏற்கனவே பணப்பற்றாக்குறையில் இருக்கும் சபைக்கு இது பெரும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. அத்துடன் இன்னும் இரு வருடங்களுக்கு வேறு எந்த நாட்டு அணியும் பாக்கிஸ்த்தானுக்குசெல்ல மாட்டாது. இது பாக் துடுப்பாட்டசபையின் வருமானத்தை பெரிதும் குறைக்கவுள்ளது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...