Wednesday 18 March 2009

கிழக்கின் உதை-யமும் இந்தியப் பயிற்ச்சியும் - சிறுமி கடத்திக் கொலை.


கருணாவின் பயிற்ச்சி முகாமொன்றை தாக்கி அழித்த போது அங்கிருந்த இந்தியப்படையை சேர்ந்தவர் ஒருவரும் கொல்லப்பட்டார். அங்கு அவர்களுக்கு என்ன பயிற்ச்சி வழங்கப் பட்டது என்று இப்போது புரிந்துள்ளது. அக்குழு இப்போது இரண்டாகப் பிரிந்து பல அட்டூழயங்கள் புரிவதாகக் கூறப்படுகிறது

கிழக்கின் உதயமா? உதை-யமா?
விடுதலைப் புலிகள் கிழக்கிலிருந்து வெளியேறியதும் அது கிழக்கின் உதயமென்று சிங்களப் பேரினவாதிகள் ஆர்ப்பரித்தனர். அது இப்போது புரிந்துள்ளது.

கடந்த 11 ஆம் திகதி பாலையூற்றை சேர்ந்த 6 வயதான வர்ஸா என்ற சிறுமி திருகோணமலை சென் மேரிஸ் பாடசாலையில் இருந்து கடத்தி செல்லப்பட்டார்.
இவரை விடுவிக்க 3 கோடி ரூபா கப்பம் கோரப்பட்டு பின்னர் அது 10 இலட்சம் ரூபா வரை குறைக்கப்பட்டது சிறுமியின் குடும்பத்தினர் பணம்திரட்டுவதற்குள் சிறுமி பாலியல் வதை செய்யப் பட்டுக் கொல்லப்பட்டார். இச்சிறுமியின் கொலை தொடர்பான வைத்திய பரிசோதனையின் போது வர்ஷா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக பொலிஸ் அதிகாரி வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நித்தியபுரத்தைச் சேர்ந்த ஒப்ரின் மேர்வின் ரினோசன் ( வயது 26 ) என்ற நபர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டு வைத்திய பரிசோதனைக்காக பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட வேளை பொலிஸ் அதிகாரியொருவரின் கழுத்தை நெரித்து தப்பியோட முயன்ற வேளை அப் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் உயிரொடு இருந்திருந்தால் நீதி விசாரணயின் போது மேலும் பல உண்மைகள் வெளியாகி இருந்திருக்கும். இவரது மரணம் திட்டமிட்டு நடாத்தப்பட்ட நாடகமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...