Monday 9 March 2009

சேலையணிந்த முசோலினியும் சால்வையணிந்த ஹிட்லரும்



எமது தமிழநாட்டு உயிரிலும் மேலான உறவுகளே
உடன் பிறப்புக்களே இரத்தத்தின் இரத்தங்களே
ஈழத்தோர் துயர்கண்டு துடித்தெழுந்தீரே
உடல் சிதறி இறக்கும் எம் சிறார்களைக் கண்டு
உங்கள் நெஞ்சு தவித்ததே துடிதுடித்ததே
உண்ணா விரதம் இருந்தீரே
கொட்டும் மழையில் கைகோத்து நின்றீரே
தீக்குளித்து இறந்து மடிந்தீரே
நடிகர் சங்கம் இயக்குனர் சங்கம்
சின்னத் திரையினர் வழக்குரையினர்
இன்னும் எத்தனை அமைப்புக்கள்
எமக்காக குரல் கொடுத்தன
பொங்கி எழுந்தன பேரணி நடாதின
சேலையணிந்த முசோலினியின் செவியில் விழுந்ததா
சால்வையணிந்த ஹிட்லர் பணிந்தானா
ஆரியசிங்களக் கூட்டமைப்பு அசைந்த்தா
ஏன் என்று சிந்தித்துப் பார்ப்போமா
தமிழ்நாடு அரசு என்பது ஒரு பாரிய மாநகர சபை
அதிகாரம் கையில் இல்லாத அரசு
அதிகாரம் குவிந்திருப்பது டில்லியில்
டில்லி யார் கையில் சிந்தியுங்கள்
உங்கள் உடனடித் தேவை
சுயநிர்ணய உரிமை சுய ஆட்சி
உத்தரப் பிரதேசப் பேரினவாதிகளின்
கொத்தடிமைகளிடமிருந்து
மீட்டெடுங்கள் தமிழ் மண்ணை.

1 comment:

Anonymous said...

This is the reason India is not supporting your 'freedom' struggle. A few blogs up, you were saying a free Eelam would not pose a challenge to India. But here you are trying to sow the toxic seeds of separationism in Tamilnadu. Well, what you need to understand is, we are free here in Tamilnadu. We don't need the kind of 'freedom' that LTTE provides the population under its control. Thanks for the offer.

And before you start casting aspersions, let me clarify I am a pure Tamilan, and not a Brahmin.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...