Tuesday 3 March 2009

இலங்கை துடுப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலில் மூன்றாவது நாடு சம்பந்தம்?

ஓரு நாடு தனது உள்ளகப் பிரச்சினைகளை கட்டுமீறிப் போக விடும் நிலையில் அந்நியத் தலையீடு அந்நிய நாடு சார் ஆயுதக்குழுக்கள் மிக அதிகரித்தே இருக்கும். இதை நாம் எண்பதுகளில் இலங்கையில் கண்கூடாகக் கண்டோம். அந்நிய சக்திகளுக்கு சார்பான இயக்கங்கள் பல தீய செயல்களைச் செய்வதும் அந்தப் பழியை புனிதமாகப் போராடும் இயக்கங்கள்மீது போடுவதும் நாளாந்த நிகழ்வுகளாக இருக்கும். ஒரு சிறு உதாரணம். யாழ் நகரில் உள்ள கோவில் நகைகள் ஒரு இயக்கம் கொள்ளை அடித்தது. அந்த (இயக்கம் இப்போது துரோகக் குழுவாக சிங்களவருடன் இணைந்து தமிழர்களைக் கொல்கிறது) விடுதலைப் புலிகள் ஆலயத்தைக் கொள்ளையடித்ததாக இந்திய உளவுத்துறை சார்புப் பத்திரிகைகள் செய்தியாக வெளியிட்டன. இந்த அனுபவத்தை வைத்துப் பார்க்கும் போது இலங்கை பாக்கிஸ்தான் உறவை துண்டாட விரும்பும் நாடு ஒன்று இலங்கைக் துடுப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு சம்பந்தப் பட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. இலங்கை பாக்கிஸ்த்தானுடன் நெருங்கிய உறவைப் பேணாதிருக்க இலங்கைக்கு பணத்தையும் கொடுத்து 6000 பிணந்தின்னி நாய்களையும் அனுப்பி தமிழினகொலைக்கு உதவுபவர்களை நாம் நன்கறிவோம்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...