Wednesday 4 February 2009

பனியே நீ இந்திய அமைதிப் படையா?



விண்ணில் இருந்து
வெண்பூக்கள் துாவியதுபோல்
பனி மழை பொழிந்தது
இலை உதிர்த்த மரங்கள்
புது வாழ்வு பெற்ற விதவைபோல்
மல்லிகை மலர் சூடியது போல்
புத்தழகு பெற்று நின்றன
எங்கும் துாய வெண்மை
நாளொன்று சென்றது
பனி மெல்ல உருகியது
கருஞ் சேறாக மாறியது
நடந்தோர் வழுக்கி விழுந்தனர்
வாகனங்கள் சறுக்கி மோதின
எல்லா இடத்திலும் களேபரம்
வரும்போது அழகு
போகும் போது நிர்மூலம்
பொழிந்த பனியே நீயும்
இந்திய அமைதிப் படையா?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...